நமது இந்தியாவின் 67வது சுதந்திரதின விழாவில் நமது ஜனாதிபதி உயர்திரு பிரணாப் அவர்களின் உரையில் சில
நாட்டில் ஊழல் பெரும் சவாலாக உள்ளதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்
இந்தியாவின்
67–வது சுதந்திர தின விழா (வியாழக்கிழமை)
இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது:–
ஊழல் பிரச்சினை
நமது ஜனநாயக அமைப்புகள் தேசத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. நமது பாராளுமன்றமும், சட்டசபைகளும் சட்டம் இயற்றுதல், விவாதம் நடத்துதல் ஆகியவற்றை விட சண்டை நடக்கும் அரங்கங்கள் போல் காணப்படுகின்றன.அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்கும் நமது அரசியல் சட்டம் தனித்தனி அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அந்த அதிகார வரம்புகளுக்குள் அவை செயல்பட வேண்டும்.
விவாதங்கள் நடைபெற்று முடிவு காணப்பட நமக்கு பாராளுமன்றம் தேவை. தாமதம் இன்றி நீதி வழங்க நமக்கு நீதிமன்றங்கள் தேவை.ஊழல் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நனவாக்க வேண்டும். அதற்கான முயற்சியை உண்மையான அக்கறையுடன் மேற்கொள்வதுடன் நேர்மை, தியாக உணர்வுடன் பாடுபட வேண்டும். கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாமல் வரும் செல்வம், ஒழுக்கமில்லாத கல்வி, நேர்மையற்ற வியாபாரம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு ஆகிவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறி இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது போதனைகளை ஏற்று நவீன ஜனநாயகத்தை படைக்க வேண்டும். தேசபக்தி, கருணை, சகிப்புத்தன்மை, சுயகட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம், பெண்களை மதித்தல் ஆகிய பண்புகளுடன் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்
நன்றி ....தினத்தந்தி
No comments:
Post a Comment