அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
3.8.2013 - சனிக்கிழமை அன்று டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வி.பி.ஹவுஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாவலங்கர் ஹாலில் நடைபெறவுள்ள அகில இந்திய கருத்தரங்கத்திற்கு நமது மாவட்டத்திலிருந்து, தமிழ் மாநில துணைத் தலைவர் தோழர். எஸ். ஜான் போர்ஜியா பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்.
தோழர். எஸ். ஜான் போர்ஜியா, தமிழ் மாநில துணைத்தலைவர் |
BSNL-ன் புத்தாக்கம் தொடர்பான இந்த தேசிய கருத்தரங்கினை வெற்றிகரமாக்கிட FORUM OF BSNL UNIONS & ASSOCIATION நமது மத்திய சங்கத்தின் தலைமையில் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இக்கருத்தரங்கத்தில் கீழ்க்கண்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று கருத்துரையாற்ற இருக்கிறார்கள்.
1. டாக்டர். சஞ்சீவிரெட்டி - M.P., President- INTUC
2. தோழர். குருதாஸ் குப்தா - M.P., G.S., AITUC
3. தோழர். ஸ்வதேஷ் தேவ் ராய் - Secretary, CITU
4. தோழர். பைத்யநாத்ராய்- GS, BMS
5. தோழர். T.K.S. இளங்கோவன் - M.P., LPF
தேசிய அளவில் நடைபெறும் இந்த BSNL புத்தாக்கம் தொடர்பான கருத்தரங்கம் எல்லா வகையிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
என்றும் தோழமையுடன் . . .
எஸ். சூரியன் - மாவட்ட செயலர்-
No comments:
Post a Comment