Thursday 29 August 2013

பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் ; தேசபக்தியும் கிடையாது.

நினைக்கவே பகீரென்கிறதே! - பழ.கருப்பையா. MLA

பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடை யாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள்! நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டு பற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுக ளோடு அவர்களுக்குள்ள உறவும்! எது இலாபகர மானது என்று பார்த்து வரு வார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரி கிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்!
அமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்ற வுடன் புறப்பட்டுவிட் டார்கள்! வளரும் நாடுகளைவிட வளர்ந்தநாடுகள் சிறந்தவைதானே!இந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர் களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்!
அந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்!வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லை!அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது? பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே!ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்!பிடி என்ன நம் முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது? இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது! இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ!
 தினமணி நாளிதழ் (28-08-2013) கட்டுரையிலிருந்து...


















No comments: