Thursday, 29 August 2013

ரூபாய் மதிப்பு புதனன்று மாலை 68.75

வீழ்ச்சி அடைவது ரூபாய் மதிப்பு மட்டுமா?
இது ஒரு பொருளாதாரச் சுனாமி என்று சொல் கிற அளவுக்கு இந்திய ரூபாயின் சர்வதேச மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு புதனன்று மாலை 68.75 ஆக வீழ்ந்துள்ளது. இந்த வீழ்ச்சி வேகம் அதிகரிக்கக்கூடுமேயன்றி உடனடி யாகக் குறைவதற்கான வாய்ப்பு கண்ணில் தெரியவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொதுவாக டாலருக்கான இந்தி யப் பணத்தின் மதிப்பு ரூ.49 முதல் ரூ.55 வரை யில் என ஊசலாடுவது கடந்த காலத்திலும் நடந்திருக்கிறது.
ஆனால், இந்த அளவுக்குச் சரி வடைந்து தலைப்புச் செய்தி யாவது அண்மைக் காலமாகத்தான் நடக்கிறது. இவ்வாண்டு ஏப்ரலுக்குப் பிறகு 20 சதவீதம் வரையில் சரிந் திருப்பது அசாதாரணமானது.விலைவாசி மதிப்பை உயர்த்துகிற நடவடிக் கைகளை எடுக்கிறபோதெல்லாம் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இங்கேயும் இப்படிச் செய்ய வேண்டியிருக்கிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் விளக்கம் அளிப்பது வழக்கம். ஆனால் உலக அளவில் இந்தியப் பணத்தின் மதிப்பு இப்படி சரிந்துள்ள நிலையில், “இது அறி வுக்குப் பொருந்தாத உணர்வுகளின் காரணமாக ஏற்பட்டிருக்கிறது. அச்சமடையத் தேவை யில்லை.
சில நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும்என்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் சமாதானம் கூறுகிறது.அறிவுக்குப் பொருந்தாத உணர்வுகள் என்று எதைக் கூறுகிறார்கள்? சிரியா நாட்டின் அரசி யல் கொந்தளிப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதன்மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும் என்ற செய்தி வந்துள்ளதையடுத்து உலகப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தான் அறிவுக்குப் பொருந்தாத உணர்வுகள் என்று அமைச்சகம் கூறுகிறதா? ஆனால் இந்த நிலைமை கடந்த இரண்டு நாட்களாகத்தான் உருவாகியுள்ளது.மாறாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியோ கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான நடைமுறை யாக இருந்து வந்திருக்கிறது. அதற்கும் தற் போதையஅறிவுக்குப் பொருந்தாதஉணர்வு களுக்கும் என்ன சம்பந்தம்?ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையி லான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) கடுமையான அளவைத் தொட்டதால், ரூபாய் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை அடையப் போவது நிச்சயம் என்று ஒரு வாரத்திற்கும் முன்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி எச் சரித்திருந்தது.

தங்கம், வெள்ளி, ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை யல்லாத பொருள்களைக் கண்மூடித்தனமாக இறக்குமதி செய்ய அனுமதித்ததால்தான் சிஏடி பிரச்சனை முற்றியது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியிருந்தது. இப்போது அந்த எச்சரிக்கை உண்மையாகியிருக்கிறது.இப்போதாவது அரசு தனது கொள்கைக் கோளாறுகளை ஒப்புக்கொண்டு மாற்று நட வடிக்கைகளுக்கு முன்வர வேண்டும். இல்லை யேல், ரூபாய் மதிப்போடு இந்தியாவின் பொரு ளாதாரத் தன்னாளுமையும் பாதாளத்தைத் தொடு வதைத் தடுக்க முடியாது.அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளால் மக்கள் ஆவேச மடைவதையும் தடுக்க முடியாது. ஏற்கனவே சரிந்துள்ள ஆட்சியாளர்களின் செல்வாக்கையும் தூக்கி நிறுத்திவிடமுடியாது.

No comments: