முத்தமிழ் சங்கம் வளர் மாமதுரையில் . . .
முத்திரை பதித்த ஒப்பந்த ஊழியர்களின் எழுச்சி மிகு . . .
மதுரை மாவட்ட 6வது மாநாடு . . .
அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம் !!
மதுரை என்றாலே! பல்வேறு வரலாறுகள் உண்டு ... ... அது அரசியலாக இருந்தாலும் சரி, சங்கமாக இருந்தாலும் சரி, புதிய புதிய பதிவுகள் உண்டு. அனைத்திலும் தனியார்மயம் என்றும், அவுட் சோர்சிங் முறை என்றும் அமலாக்கிக் கொண்டிருக்கின்ற ஆளும் காங்கிரஸ் சர்க்கார், தொலை தொடர்பு துறையை நிர்மூலமாக்கும் திசை வழியில் சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுரையில் ஒப்பந்த ஊழியர் மாநாடு முத்திரையை பதித்தது என்றால் அது மிகையாகாது.
38 பெண்களின் சீருடையுடன் கூடிய சிறப்பான பங்கேற்பு உட்பட 300க்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர் மாநாடு மாற்றாரும் வியக்கும் வண்ணம் நடந்தேறியது.
பொது மேலாளர் திருமிகு. S.E. ராஜம் ITS அவர்களின் பங்கேற்பும், பொருள் பொதிந்த உரையும்; மதுரை மாநகர் CPI (M) மாவட்டசெயலர் தோழர் பா.விக்ரமனின் வழிகாட்டுதலான ஆவேசமிக்க உரையும்; தமிழ் மாநிலச்செயலர் தோழர் முருகையாவின் கருத்தாழமிக்க மாநாட்டு துவக்கவுரையும்;
ஒப்பந்த ஊழியர்கள் மாநாட்டின் செயல்பாட்டு அறிக்கையில் ஒட்டுமொத்த வரைபடத்தை அளித்த தோழர் வி. சுப்பராயலுவின் அறிமுக உரையும்; வரவேற்புக்குழு தலைவர் தோழர் எஸ். சூரியனின் வரலாறு பொதிந்த வரவேற்புரையும்; BSNLEU மாநில அமைப்பு செயலரும், வரவேற்புக்குழு செயலருமான தோழர் சி. செல்வின் சத்தியராஜின் கட்டமைப்பு சம்பந்தமான வாழ்த்துரையும்; மணிமகுடம் வைத்தாற்போன்று மாநாட்டின் நிறைவுரையாற்றிய மாநில துணைத்தலைவர் தோழர் மாணிக்கமூர்த்தி அவர்களின் அறிவுரையும்;
அனைவருக்கும் அளிக்கப்பட அறுசுவை உணவு, வந்தவர்களை உபசரித்து அறுசுவை உணவும், அருமையான கைப்பையும் வழங்கிய வரவேற்புக்குழு, ஐந்தே நிமிடங்களில் ஆழமான அறிவுரை வழங்கிய துணை பொது மேலாளர் திரு. சேவியர் அவர்களின் சுருங்கச்சொல்லி விளங்க வைத்த உரை, அரவணைப்புடன் சிறப்பான பங்கெடுப்பை செயல்பாட்டை உத்தரவாதப்படுத்திய BSNLEU கிளை, மாவட்ட சங்க நிர்வாகிகளின் பொறுப்புணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரும் பாராட்டும் வண்ணம் நடந்தேறிய புதிய நிர்வாகிகள் தேர்வு . . . இப்படி சிறப்பு . . . சிறப்பு . . . எல்லாம் சிறப்பு . . . என்பதுதான் ஒப்பந்த ஊழியர்களின் 6வது மாநாடு . . .
தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் கே.வீரபத்திரன், என்.சோனைமுத்து, ஆர்.சுப்புராஜ் ஆகியோரை உள்ளடக்கி தேர்வாகியுள்ள TNTCWUவின் புதிய மாவட்ட சங்க செயல்பாடுகள் சிறக்க . . . உளமார . . . மனதார . . . BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
என்றும் தோழமையுடன்,
எஸ். சூரியன் - மாவட்ட செயலர் -
மனதை கொள்ளை கொள்ளும் மாநாட்டு நிழற் படங்கள் . . .
|
மாநாட்டின் நுழைவு வாயில் |
|
சார்பாளர் / பார்வையாளர் பதிவு |
|
மாநாட்டில் சீருடையுடன் பங்கேற்ற மகளிரின் ஒரு பகுதி |
|
தோழர் உசிலை சௌந்தர் தேசிய கொ டி ஏற்றல் |
|
தோழர் செல்வத்தின் எழுச்சிமிகு கோஷம் |
|
தோழியர் வள்ளி சங்கக் கொடி ஏற்றல் |
|
தோழர் வி. சுப்புராயலு ஆண்டறிக்கை மீதான அறிமுக உரை |
|
மாவட்ட த்தலைவர் தோழர் கே. வீரபத்திரன் தலைமையுரை |
|
மாநாட்டில் பங்கேற்றோரின் ஒரு பகுதி |
|
மாநாட்டில் பங்கேற்றோரில் மகளிர் பகுதி |
|
மாநாட்டு மேடையில் சங்கம் காக்கும் தலைவர்கள் |
|
மாநாட்டில் அஞ்சலி உரை நிகழ்த்தும் தோழர் முத்துரத்தினம் |
|
வரவேற்பு குழு தலைவரின் வளமிகு வரவேற்புரை |
|
மாநாட்டில் பங்கேற்றோரின் ஒரு பகுதி |
|
மாநாட்டில் பங்கேற்றோரின் ஒரு பகுதி |
|
மாநாட்டில் பங்கேற்றோரின் ஒரு பகுதி |
|
மாநாட்டில் பங்கேற்றோரில் மகளிர் பகுதி |
|
வரவேற்புக்குழு தலைவருக்கு மாவட்ட செயலர் கதராடை அணிவிப்பு |
|
தமிழ் மாநிலபொதுசெயலருக்கு தோழர் சுப்புராஜ் கதராடை அணிவிப்பு |
|
மாநாட்டு நினைவு பரிசை தோழர் என். ராஜு பெறுகிறார் |
|
மாநிலபொது செயலரின் மாநாட்டு துவக்கவுரை |
|
பொது மேலாளருடன் TNTCWU & BSNLEU மாவட்ட செயலர்கள் உரையாடல் |
|
இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என பெருந்திரளாய் . . . |
|
பொது மேலாளர் திருமிகு ராஜம் ITS அவர்களுக்கு
கதராடை அணிவித்து கவுரவிக்கும் தோழியர் சுந்தரி |
|
சென்றவிடமெல்லாம் தம் திறமை கொண்டு பொறைமேவும் பொது மேலாளருக்கு வரவேற்பு குழு தலைவர் வழங்கும் நினைவுப்பரிசு |
|
தூய உள்ளம் துணை பொதுமேலாளர் திரு. சேவியர் அவர்களுக்கு
மாநில அமைப்பு செயலர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் கதராடை அணிவித்தல் |
|
மாநில செயலர் தோழர் முருகையாவிற்கு நினைவு பரிசு வழங்கும்
தோழர் சாலமன் ராஜா |
|
தோழர் பா. விக்ரமன் CPI (M) மாவட்ட செயலர் அவர்களுக்கு நினைவு பரிசு |
|
மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றிய தோழர் பா. விக்ரமன் அவர்களுக்கு கதராடை |
|
மாநாட்டில் நிறைவுரையாற்றிய தோழர் பி. மாணிக்கமூர்த்தி, மாநில துணை தலைவருக்கு கதராடை அணிவிக்கும் தோழர் பாஸ்கரன் |
|
தேசிய கொடி ஏற்றிய தோழர் மா. செள ந்தருக்கு
கருப்பசாமி கதராடை அணிவித்தல் |
|
துறை தோறும் திறன் காட்டும் பொறைமேவும் பொற்குன்று
- பொதுமேலாளரின் பொருள் பொதிந்த உரை - |
|
மாநாட்டின் அறிவுசேர் ஆலயமாய் பாரதி புத்தகாலயம்
|
1 comment:
தங்களது பணி மேலும் மெறுகேறுவது கண்டு மகிழ்வோடு வாழ்த்துகிறேன்!
-- ராதா
Post a Comment