Friday 30 August 2013

ஓய்வூதியர்கள் கோரிக்கைக்காக தர்ணா 28.08.13

ஓய்வூதியர்களுக்கும் 78.2 IDAவழங்கவலியுறுத்திதர்ணா . . . . 
ஓய்வூதியர்களுக்கும் 78.2 விழுக்காடு பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல்- டெலிகாம் துறை DOT ஓய்வூதியர் சங்கம் சார்பில் வியாழனன்று (ஆக.29) தமிழ கம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.புதிய பென்சன் மசோ தாவை திரும்ப பெற வேண் டும், DOT ஓய்வூதியர் களுக்கு மாதம் 1200 ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண் டும், பிஎஸ்என்எல் ஓய்வூதி யர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை மாதந் தோறும் திரும்ப வழங்க வேண்டும்; ஆண்டு வரம்பு, புதிய சம்பளத்தில் 30 நாட் களாக உயர்த்த வேண்டும்.
பிஎஸ்என்எல்-லில் இருந்து 1.10.2000 முதல் 31.7.2011 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு உள்ள ஓய்வூதியக் குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.இறுதியாக பெற்ற ஊதியத்தில் 60 விழுக் காட்டை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை குறைந்தபட் சம் 3880 ரூபாயாக உயர்த்த வேண்டும், இறுதிச்சடங்கு நிதியாக 15ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் DOT ஓய்வூதியர்களுக்கு பிராட் பேண்ட் சலுகை நீட்டிக்க வேண்டும், ஓய்வூதியர் களுக்கு குடியிருப்பு வாடகை, அடிப்படை ஊதியத்தில் 10விழுக்காடு என நிர்ண யிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற் றது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி , மதுரையில் தர்ணா நடைபெற்றது பிஎஸ்என்எல் LEVEL -4 அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.இப்போராட்டத்திற்குதோழர் பி .முருகேசன்  தலைமை தாங்கினர்.BSNLEU  சங்கத்தின் தமிழ் மாநிலஅமைப்பு  செயலாளர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார்  போராட்டத்தை தொடங்கி வைத்து தோழர் .எஸ்.சூரியன் BSNLEU  மாவட்ட செயலர் உரையாற்றினார் . தோழர் எம் .செல்வராஜ் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்..
போராட்ட வாழ்த்துக்களுடன் ....எஸ்.சூரியன் ---மாவட்ட செயலர் .

No comments: