Friday, 30 May 2014

பிரதமர் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் . . .

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மையங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கிவிட்டது.புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தை புதுப்பித்து முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்புஎன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணியாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சோசலிச, மதச்சார் பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த்திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பதுதான்.ஆனால், பிரதமர் அலுவலக இணையதளத்தில் குறிப் பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணையதளத்தில் எழுதி யிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்தஇணையதளத்தில் தனது சிந்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: “சங் அமைப்பின் சிந்தாந்தம் என்பது, ஒட்டுமொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூலமாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய்வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற்றுவதே.
இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணியாற்றுவதற்கான வழிமுறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.”பிரதமர் அலுவலகத்தில் புதிய இணையதளத்தில், முன்புஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தனிப்பட்ட நபர்களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.
அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. உதாரணத்திற்கு, 2001 ஆகஸ்ட்டில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம்தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக்கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்ற அளவிலேயே இருந்தது.அந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் இனாம்தார் தொடர்பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தகவலும் உண்டு.
இனாம்தாரை, வக்கீல் சாகேப் என்றும் குறிப்பிடுவார்கள். அவரைப் பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ்சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதாநாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதுதொடர்புடைய ஆர்எஸ்எஸ் ஊழியர்களை பாதுகாப்பதற்கும் இதே வக்கீல் சாகேப்தான் வாதாடினார் என்பது தனிக்கதை.(மே 30 பிஸினஸ் லைன் ஏட்டில்வெளியாகியுள்ள செய்தியிலிருந்து)

நமது துறை அமைச்சரிடம் நமது JAC கோரிக்கைமனு.


நமது தமிழ் மாநில சங்கத்திலிருந்து . . .



100 -வது ஒருங்கிணைந்த பணிநிறைவு பாராட்டு விழா...

பல்லாண்டு வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
அருமைத் தோழர்களே! நமது  மதுரை மாவட்டத்தில் மே-2014ல்  பனி நிறைவு செய்பவர்களுக்கான பாராட்டு விழா, மதுரை G.M அலுவலகத்தில்  30.05.14 வெள்ளி அன்று 11 மணி அளவில் நடை பெறவுள்ளது ....
பணிநிறைவு  பாராட்டுக்குரியவர்கள் 
1. S.அருள் மொழி,AGM-TKM
2. N.தேவேந்திரன்,JTO-PLN
3. S.ஈஸ்வரன் DGM-TKM
4. E.கணபதி ,STS-DDG
5. R.கணேஷ்பிரபு ,JTO-TEI
6. R.ஜீவானந்தம் ,TM-BBK
7. C.ஜெயராமன் ,TM-TKM
8. லட்சுமி ராகவன்,SSS-GM(O) 
9. S.மீனாட்சி ,TMAN-CSC
10. D.முருகன் ,STS-BOK
11. A.பாப்பா,Gr-D-TMM 
12. R.ராமச்சந்திரன் ,AGM-TKM
13. ரீட்டா சந்திரன்,STM-CSC
14. P.சங்கிலி ,Dr.G.M(O)
15. L.சண்முக வேல்,TM-SDOT 
16. S.சிங்கார வேல் ,TM-TEI
17. A.உஷா ராணி ,SSS-TEI
18. K.வேல்மயில்,TM-DDG
19. V.மீனாட்சி  STM-CMTS
அனைவரின் பனி ஓய்வு காலமும் சிறக்க உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
                       ---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் -D/S-BSNLEU.

மே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .

1970ல் துவக்கப்பட்ட சிஐடியு இந்த மே 30ம் நாளோடு 44 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.ஏகாதிபத்தியம், பன்னாட்டு மூலதனம், இந்திய ஏகபோகம், நிலபிரபுத் துவம் என சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தவும், தொழிலாளி வர்க்கத் திற்கெதிரான தத்துவார்த்த தாக்குதலை எதிர்த்தும், இந்திய மண்ணில் சோசலிச சமுதாயத்தை உருவாக் கவும் உறுதி பூண்டு சிஐடியு செயல்பட்டு வருகிறது.
புதிய முறையில் உழைப்பு சுரண்டல்
உலகமயம்-தாராளமயம்-தனியார்மயசுரண்டல் முறை களுக்கு  மேலும் வலுவூட்டியுள்ளது. காண்ட்ராக்ட். கேசுவல், பதிலி, பயிற்சியாளர் என பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் வேகப் படுத்துவதோடு, நடைமுறையில் உள்ள ஊதிய விகிதம் கூட மறுக்கப்படுவது பரவலாக உள்ளது. அடுத்து சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் நலிவடைவதும், மூடப்படுவதும் நடந்தவண்ணமுள்ளன. உரிய இழப்பீடுகூட இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொழில்களில் வேலையிழந்துள்ளனர்.எல்லாத் தொழில்களிலுமே இயந்திரங்கள் நவீனப்படுத்தல் காரணமாக வேலையிழப்பு நடக்கிறது. ஹூண்டாய் போன்ற கார் கம்பெனிகளில் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் வேலையிழப்பு நடந்து வருகிறது. விரும்பினால் உள்ளேற்றுவது இல்லாவிட்டால் வெளியேற்றுவது என்ற கொள்கை சட்டப்பூர் வமாகாவிட்டாலும் ஏராளமான தொழிற்சாலைகளில் இது நடை முறையில் உள்ளது. ஹூண்டாய் கம்பெனியில் காண்ட்ராக்ட், கேசுவல் என்ற பெயரில் 13,000 பேர் வரை பணியாற்றினர்.
இப்போது எட்டாயிரம் பேர் தான் உள்ளனர். எலக்ட்ரானிக் கம்பெனியான நோக்கியாவில் பணியாற்றிய 25000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சுயதொழில் செய்வோர் மற்றும் முறை சாராப் பிரிவினரும் கூட கடுமையான வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதே போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு கொடுமைக்கு ஆளாக் கப்படும் பெண் தொழிலாளர்கள், குழந்தை உழைப்பாளர்களின் பிரச்சனைகளும் தொழிற்சங்க இயக்கத்தின் முன் உள்ள சவால்களாக தொடர்கின்றன.வேலையிழப்புகளும், புதிய வேலை வாய்ப்பின்மையும் போக்கப்படவேண்டு மானால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவை. காண்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15 ஆயிரம் என்ற நிலை உருவாக்கப்பட்டாலே இந்திய பொருளாதாரத்தில் மலர்ச்சி ஏற்படும். முதலாளிகள் லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் இதை சொல்லத் தயங்காத அரசுவேண்டும். முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.
உரிமைகளை பாதுகாப்போம்
முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.இந்த சூழ்நிலையை உணர்ந்து,தொழிலாளிவர்க்க ஒற்று மையையும், தொழிற்சங்க ஒற்றுமை யையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கோடு தான் உலக தொழிற்சங்க சம்மேளனத்தோடு இணைந்து உலக தொழிலாளரே ஒன்றுசேருங்கள் என்ற கோஷத்தை இந்திய உழைப்பாளி மக்களுக்கு முன்னால் சிஐடியு முன்வைத்துள்ளது.இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்உள்ள இந்த முக்கிய கடமைகள்.... 
1. நாடு தழுவிய ஒன்றுபட்ட தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவது, 2.தேசிய அளவிலும், களத்திலும் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தி விரிவு படுத்துவது, 3. ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராக உள்நாட்டில் போராடுவது மட்டுமின்றி உலகம் தழுவிய தொழிலாளிவர்க்கப் போராட்டங்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிப்பது, 4. வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்திக் கொள்கை உருவாக்கத்தில் தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 1. குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000, 2.காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், 3.அங்கன்வாடி-டாஸ்மாக்-உள்ளாட்சி துறைகளில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச பென் சன் ரூ. 4000, 4. காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, 5.முறைசாரா நலவாரியங்களை முறையாக செயல்படுத்துவது, பணப்பலன்களை இரட்டிப் பாக்குவது, 6. புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது, 7. தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றுவது போன்ற தமிழக உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்........-தீக்கதிர்