Saturday, 5 October 2013

ரோபோக்கள் தானாகவே சிந்தித்துச் செயல்படும் ...

ரோபோக்கள் தானாகவே சிந்தித்துச் செயல்படும் விதத்தில், அவைகளுக்கான மூளையை இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.
மிசௌரி பல்கலைக்கழக பேராசிரியர் ஜெகநாதன் சாரங்கபாணி இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார்.இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லும் ரோபோக்கள், தாங்கள் செய்யும் பணி சார்ந்து சுயமாகச் சிந்தித்து, கற்றுக்கொண்டு, செயல்படும் திறனைப் பெறும் வகையில் இந்த மூளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபாக்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்தப் புதிய தொழில்நுட்ப மூளை பொருத்தப்பட்ட தலைமைக் கட்டுப்பாட்டு ரோபோ, ஏதேனும் காரணத்தால் செயலிழந்து விட்டால், அதன் கீழ் பணிபுரியும் மற்றொரு ரோபோ, தலைமைப் பொறுப்பைத் தானாகவே ஏற்றுக் கொண்டு செயல்படும்.
"சோனார்" முறையில் இந்த ரோபோக்கள் ஒரே வகையான செயல்பாட்டு முறையில் இணைக்க ப்படுவதால் இது சாத்தியமாகிறது.ரோபோவின் செயல்பாட்டில் தவறு நேரும்போதோ, பழுது ஏற்படும் போதோ பணியைத் தொடர அது சரி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது, பிழை பொறுப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படத் தொடங்கும். இதனால், மனித உழைப்பு மேலும் சிக்கனப்படுத்தப்படுகிறது.இது தொடர்பாக சாரங்கபாணி கூறியதாவது:
10 புல்டோஸர்களை தனி ஒருவராக ரிமோட் மூலம் கட்டுப்படுத்தவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இந்தப் புதிய செயல்பாட்டு முறை, தலைமை வகிக்கும் இயந்திரம் பழுதடைந்தால், மற்றொரு இயந்திரத்தின் மூலம் பணி தொடர்வதை அனுமதிக்கும் என்றார்.ரோபோ பாதுகாப்பு கண்காணி்ப்பு முறை, சுரங்கம், வான் சார்ந்த பணிகளில் இத்தொழில்நுட்பம் மிகவும் பயனுடையதாக இருக்கும்.வானூர்திகளில் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது மிகச்சிறப்பாக இருக்கும் என சாரங்கபாணி நம்புகிறார். பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டால், உடனடியாகக் கண்டறிந்து தீர்வு காண இத்தொழில்நுட்பம் உதவும் என அவர் கருதுகிறார்."ரோபோக்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். ரோபோக்கள் தானாகவே சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், மேற்பார்வைக்கு தேவையின்றி தானாக பணிச்சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். சுய அறிவு கொண்ட ரோபோக்கள்தான் தேவை. சிறிது காலம் அதற்குத் தேவைப்படும்'' என சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.

No comments: