Thursday 29 May 2014

28.05.14 மண்டல தொழிலாளர் ஆணையருடன் . . .

அருமைத்தோழர்களே! நமது BSNLEU + TNTCWU இரு மாவட்டசங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக 28.05.14 புதன் அன்று மதியம் 12.30 மணிக்கு மதுரையில் உள்ள மத்திய மண்டல தொழிலாளர்  ஆணையர் அவர்கள் முன்னிலையில், ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நமது BSNLEU + TNTCWU சங்கங்களின் சார்பாக தோழர்கள்,M.முருகையா,ACS, C.செல்வின் சத்தியராஜ்,D/P, S.சூரியன்,D/S, V.சுப்புராயலு,ADS, N.சோனை முத்து,D/S, K.வீரபத்திரன்,D/P ஆகியோரும், நிர்வாகத்தரப்பு சார்பாக திருவாளர்கள் ராமச்சந்திரன்,AGM, கணேசன்,CO, அப்துல்காதர்,SDE-Legal ஆகியோரும் கலந்து கொண்டனர். நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது... . .
         1. கேபிள் பணிபுரிபவர்களுக்கு SEMI SKILLED  சம்பளம் வழங்குவது.
    2. ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7-ம் தேதிக்குள் சம்பளம்,   ESI/ EPF வழங்குவது.
          நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின் 7-ம் தேதிக்குள் சம்பளம் நிலுவை உட்பட வழங்க நிர்வாகம் ஒத்துக்கொண்டது. 
              SEMI SKILLED  சம்பளம் வழங்குவதற்கு மட்டும் நிர்வாகத்தரப்பில், பொது மேலாளருடன் கலந்தாலோசிப்பதற்காக அவகாசம் கோரப்பட்டது. அதற்கான இறுதி முடிவெடுப்பதற்கு மீண்டும் 18.06.2014 அன்று அடுத்த கூட்டம் நடைபெறும் என மரியாதைக்குரிய மத்திய மண்டல தொழிளார் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.
           பிரச்சனையை ஊழியர்களின் உணர்வு மட்டத்திலிருந்து விவாதித்து நல்ல தீர்விற்கு வழிவகுத்த மரியாதைக்குரிய மத்திய மண்டல தொழிலாளர்  ஆணையர் அவர்களுக்கு நமது நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம். நம்முடன் உடன் இருந்து சிறப்பான விவாதத்தை எடுத்து வைத்து பிரச்சனை தீர்விற்கு வழிகாட்டிய நமது மாநில உதவிச் செயலரும்,ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவருமான அருமைத் தோழர்.எம்.முருகையா அவர்களுக்கும் நமது நன்றியையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
      --- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ... D/S-BSNLEU.

1 comment:

Unknown said...

A good start. Congrats