அமெரிக்காவில் அரசுத்
துறைகளை
முடக்கச்
செய்துள்ள
அரசியல்
நெருக்கடி
குறித்து
நிதித்துறையைச்
சார்ந்தவர்கள்
அக்கறை
காட்டவில்லையென்றால்,
நாடு
கடனில்
மூழ்கும்
அபாயம்
ஏற்படும்
என
அதிபர்
ஒபாமா
எச்சரித்துள்ளார்.
தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் தடுக்கும் குடியரசுக் கட்யினருக்கு நிதித்துறையினர் மூலம் நெருக்கடி கொடுக்கும் விதமாக சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
கடைசி நிமிடங்களில் சரிசெய்யப்பட்ட சமீபத்திய நிதி நெருக்கடிகளைப் போல, இந்த நெருக்கடியையும் எடுத்துக் கொள்ள முடியாது. இது முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்க அரசை கடனில் மூழ்கடித்துவிடும் தன்மை கொண்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக குடியரசுக் கட்சியினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால், தங்களது கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை கட்சிகள் மிரட்டும் இந்தப் போக்கு, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்
No comments:
Post a Comment