இங்கிலாந்தில் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம்செய்ததால் 10 ஆயிரம் மாணவர்கள்
பாதிக்கப்பட்டனர்.இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம்,
பென்சன் ஆகியவற்றில் மாற்றம்,அதிக பணிச் சுமை ஆகியவற்றை
கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வகுப்பில் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்கும் திறமைக்கு ஏற்ப ஊதியத்தை நிர்ணயிப்பது
போன்ற அதிகாரத்தை தலைமை ஆசிரியருக்கு அளிக்க கல்வித்துறை ஆலோசித்து
வருகிறது. அரசின் இந்த திட்டத்துக்கு ஆசிரியர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கங்களான
தேசிய ஆசிரியர் சங்கமும்,
என்ஏஎஸ்யுடபிள்யுடி சங்கமும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தன. இதன்படி இங்கிலாந்தில் மிட்லேண்ட்ஸ், யார்க்சர், கிழக்கு இங்கிலாந்து ஆகிய இடங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள்
செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனால் இங்குள்ள 111 பள்ளிகள் மூடப்பட்டன.
91 பள்ளிகள் மிக குறைவான ஆசிரியர்களுடன் செயல்பட்டன.மேலும் பர்மிங்காம்
நகரில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில்
இருந்து பேரணியாக ஆசிரியர்கள்
சென்றார்கள் இந்தபேரணியில் என்ஏஎஸ்யுடபிள்யுடி சங்கபொதுச்
செயலாளர் கிரிஸ்கேட் பேசியபோது,
ஆசிரியர்களின் சாதனைகளை மறைத்து தவறான தகவல்கள்,
கல்வித்துறை செயலாளர் மைக்கேல்
கோவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான விதிகள் இல்லாமல்
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இது தவறாக பயன்படுத்தக்கூடும் என்று அச்சம் தெரிவித்தார்.ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் சுமார்
10 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆசிரியர்களின் கோரிக்கைநிறைவேற்றப்படாவிட்டால்
அக்டோபர்17-ம் தேதி தெற்கு இங்கிலாந்து,
வடகிழக்கு இங்கிலாந்து, லண்டன் பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள்
வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று ஆசிரியர் சங்கங்கள்
அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment