Saturday 21 June 2014

ரயில் கட்டணம் பயணிக்கு 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

              நாட்டு மக்களுக்கு  BJP ஆட்சி தந்துள்ள  நற்செய்தி 
         
 மத்திய ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்ற முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா ரயில் கட்டணம் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்த பிறகு உயர்த்தப்படும் என்றார். இதையடுத்து ரயில் கட்டணம் ஜூன் 20ம் தேதி அன்று 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.அதன்படி இன்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ரயில் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்த புதிய கட்டண உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறதுஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணம் வேறு கடுமையாக உயர்ந்துள்ளது.இன்னும் சில நாட்களில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு கட்டண உயர்வை அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதேபோன்று பட்ஜெட்டுக்கு முன்பு கட்டண உயர்வுகளை அறிவித்தபோது அதை ஜனநாயக விரோதமானது என்று பாஜக குற்றம் சாட்டியது; ஆனால் பாஜகவின் மோடி அரசும் தற்போது அதே பாதையையே பின்பற்றுகிறது
மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு ரயில், சரக்கு கட்டணத்தை கடுமையாக உயர்த்தி அனைத்து மக்கள் மீதும் தன்னுடைய தாக்குதலை தொடுத்துள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் டீசல் விலை உயர்த்தப்பட்டது, தற்போது ஒருமாத காலத்திற்குள்ளேயே ரயில் கட்டணஉயர்வை அறிவித்துள்ளது. சரக்கு கட்டண உயர்வால் அனைத்துப்பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் நிலை ஏற்படும். இது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று தெரிந்தே மோடி அரசு மக்கள் மீது இந்த கட்டண உயர்வு தாக்குதலை தொடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட கடுமையான விலைவாசி உயர்வால் விழிபிதுங்கிய மக்கள், மோடி ஆட்சியமைந்தால் விலைவாசி குறையும் என்று எதிர்பார்த்து வாக்களித்தனர். வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் வகையில் மோடி அரசு இந்த ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
மக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கட்டண உயர்வு தாக்குதலை BSNLEU வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டண உயர்வுகளை உடனடியாகதிரும்ப பெற வேண்டுமென BSNLEU மத்திய அரசை வலியுறுத்துகிறது.

No comments: