Friday 27 June 2014

கல்யாணிமதிவாணன் V.C நியமனம் செல்லாது நீதிமன்ற தீர்ப்பு

கல்யாணி மதிவாணனை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக நியமனம் செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை எத்திராஜ்கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருந்த கல்யாணி மதிவாணன், 2011 ஏப்ரல்9 ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட் டார். இவர் முன்னாள் அதிமுகஅமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார்.அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஆசிரியர், மாணவர், ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டார். இதையொட்டி பல்கலைக் கழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றனஇந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)வகுத்துள்ள விதிமுறைகளின் படி, பத்தாண்டுகள் பேராசிரியர் பணியில் இருந்தவரே துணைவேந்தராக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் எத்திராஜ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக மட்டுமே இருந்தவர்.
ஆனால் அவர், இணைப்பேராசிரியர் என்பதை மறைத்து, பேராசிரியராக இருந்ததாகத் தன்னுடைய விண்ணப்ப மனுவில் தவறான தகவலைக் கூறி, துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் ஓய்வு பெற்ற பேரா.ஜெயராஜ், பேரா.இஸ்மாயில், சந்திரன் பாபு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.அந்த வழக்கு விசாரணைக்கு வரவிடாமல் கல்யாணிமதிவாணன் தரப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பலப்பல போராட்டங்கள், பலப்பல வழக்குகள் என்று காமராசர் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இந்த இரண்டு ஆண்டுகளில் தான் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. பல முறைகேடான நியமனங்கள், முறைப்படி இடஒதுக்கீடு செய்யாத நியமனங்கள், அதை எதிர்த்த வழக்குகள் என்று இந்த காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகம் முழுக்கபணக்கலைக்கழமாகமாற்றம் பெற்றுள்ளது.
முறைகேடுகளால் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகப் பல்வேறு மட்டங்களில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமுள்ளன.அத்தோடு தனக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்தவருக்குப் பிடிக்காத ஆசிரியர், அலுவலர், மாணவர் என்று சகல தரப்பினரையும் சஸ்பெண்டு, இடமாற்றம், பதவி இறக்கம் என்றுபல அராஜகங்களை துணைவேந்தர் பதவிகொண்டு கல்யாணி மதிவாணன் செய்தார். பேரா.கிருஷ்ணசாமி, பேரா.இரவிக்குமார், பேரா.வாசு, அலுவலர் பார்த்தசாரதி, ஆராய்ச்சி மாணவி ஈஸ்வரி, ஆராய்ச்சி மாணவர்கள் அருண், பாண்டியராஜன் என்று பலரும் அவரது தவறான நிர்வாகத்தால் கடுமையாகப் பழிவாங்கப்பட்டனர். இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தியது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், கல்யாணி மதிவாணனைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்மதுரைப் பல்கலையைப் பாதுகாப்போம்இயக்கத்தின் சார்பில் போராடி வந்த பேராசிரியர் சீனிவாசன், ரவுடிகளால் தாக்கப்பட்டு கைகள் உடைக்கப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தின் படி அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். அரசியல் செல்வாக்கினால் இன்னும் கைதாகாமல் இருக்கிறார்.இது தவிர பார்த்தசாரதி என்பவர் தொடுத்த வன்கொடுமை வழக்கிலும், முதல் குற்றவாளியாகக் கல்யாணி மதிவாணன் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.பரபரப்புத் தீர்ப்புஇந்த நிலையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனறு பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணைப் பேராசிரியரானஅவர் தன்னைப் பேராசிரியர் என்று கூறிப்பதவியை பெற்றார் என்பது இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளது.மேலும் யு.ஜி.சி. விதிகள் இவர் நியமனத்தில் மீறப்பட்டுள்ளதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட டிவிசன்பெஞ்ச், மேற்கண்ட தீர்ப்பினைஅளித்தபோதிலும், துணைவேந்தரின் வழக்கறிஞரது வேண்டுகோளை ஏற்று, இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்தனர். ஒருபல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் 2010ன் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ள தகுதிகள், காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்காற்று விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டியவை அல்ல என்ற வாய்ப்பினை பயன்படுத்தி இதுபோன்று தகுதிகள் தொடர்பான அம்சம் முற்றிலும் மறுக்கப்பட்டு பின்பற்றப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே, மேற்கண்ட நியமனம் செல்லாதுஎன்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.ஆளுநர்அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கல்யாணி மதிவாணனின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பமே, அதில் அவர் பேராசிரியர் என்று தன்னைக் குறிப்பிட்டிருப்பதே வழக்கின் மிக முக்கிய ஆவணமாக இருந்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கல்யாணி மதிவாணன், துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது எனமதுரைப் பல்கலைக் கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கம்உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர், அலுவலர் தரப்பினரும் இந்திய மாணவர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன.
ஆளுநர் விரைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு தலையிட்டு, கல்யாணி மதிவாணனை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக உயர்கல்வி வரலாற்றில், ஒரு துணைவேந்தரின் பதவி நியமனம் செல்லாது என்று நீதி மன்றத் தீர்ப்பு வந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகின்றது.

No comments: