Friday 6 June 2014

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் . . .

.. ***இயற்கையின் கேள்விகள்*** மானுடா...மானுடா... நான் இயற்கை கேட்கிறேன்... பதில் கூறடா... காற்றை கலங்கடிக்க கரிய புகை சேர்க்கிறாய்... எதை நீ சுவாசிக்கிறாயோ?? மண்ணும் வளம் இழக்க விஷம் இட்டு கொள்கிறாய்.. எதை நீ உட்கொள்கிறாயோ?? நீரின் சுவை மாற கழிவுகளை கலக்கிறாய்... எதை நீ குடிக்கிறாயோ?? பூமி பந்தை ஓட்டை போட்டு நச்சு கிருமிகளுக்கு வழி விட்டாயே... உன் வீட்டில் ஓட்டை இல்லை என்பதனால் தானோ?? வெப்பம் வெப்பம் என்று கூறிக்கொண்டே மரங்களை வெட்டி தள்ளினாயே.... .சி வாங்க பணம் இல்லையென்று தானோ?? மானுடா...மானுடா... நான் இயற்கை சொல்கிறேன்... இனியாவது கொஞ்சம் மாறுடா....!! --  


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் -என்று இந்த உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதி எடுப்போம்.

No comments: