- Tech / Non-Tehc/ Diploma Scholarship, Book Award & Merit Award ஆகியவை விண்ணப்பித்த அனைவருக்கும் அவரவர்வங்கி கணக்குகளுக்கு 25-06-2014 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் நமது தோழர்கள்சந்தித்துக்கொண்டால் கேட்கும் முதல் கேள்வி
"
தோழரே... GPF FUND வந்து விட்டதா? என்பதே...
மாதத்திற்க்கு மூன்று முறை கிடைத்து வந்த GPF இப்பொழுது விண்ணப்பித்த தொகையில்
மூன்றில் ஓரு பங்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி விட்டது.
நமது மதுரை மாவட்டத்தில் GPF நிதி 1 கோடியே 60 லட்சம் கேட்கப்பட்டது ஆனால் கிடைத்தது 55 லட்சம் மட்டுமே.எனவே, ஊழியர்கள் விண்ணப்பித்த தொகையில்
36% சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த (ஜூன்) மாதம் கல்விக் கட்டணத்திற்கும், கல்யாணச்செலவுக்கும் விண்ணப்பித்தவர்கள்வலியோடு வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
GPF வருமா...வராதா...வந்தாலும்...கேட்டது கிடைக்குமா... குழப்பத்தில் அனைவரும் உள்ளதை கணக்கில் கொண்டு நமது BSNLEU சங்கத்தின் சார்பாக, கார்பரேட் அலுவலகத்தில் GPF
ன் தற்பொழுதைய நிலை குறித்து விவாதித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் GPF நிதி ஒதுக்கீடுஒரே சீராய் வழங்கிடவும், கூடுதல் நிதி ஒதுக்கிடவும்வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment