Sunday 29 June 2014

27.06.14 - JAC பேச்சுவார்த்தையின் அம்சங்கள் . . .

  27-06-2014 அன்று இயக்குனர் (HR) அவர்களுடன் JAC நடத்திய பேச்சுவார்த்தையின் அம்சங்கள் :-
1.ஊதிய தேக்கம் :- 
RM ஊழியர்களுக்கு 78.2 IDA இணைப்பால் ஏற்பட்ட ஊதிய தேக்கத்தை களைய ஏற்கனவே ஊழியர் தரப்பு கூறிய  ஆலோசனைகளின் படி தீர்க்க JAC நிர்வாகத்தை வலியுறுத்தியது .இயக்குனர் (மனிதவளம் ) அவர்கள் இப் பிரச்சனையை நிர்வாகம் புதிய கோணத்தில் தீர்க்க முயற்சி செய்யும் என உறுதி கூறினார் .
2. ஊதிய இழப்பு :- 
01-01-2007  க்கு பின் பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய குறைப்பை ஈடு செய்ய ஒரு  இன்ரிமென்ட் வழங்குவது என்ற  நிர்வாகத்தின் முடிவை JAC  ஏற்று கொள்ள மறுத்துவிட்டது .மேலும் இப் பிரச்சனையில் மற்ற பொது துறை நிறுவனங்கள் வழங்கியது போல் 01-01-2007 முதல் 07-05-2010 வரை பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 30%  ஊதிய நிர்ணயம் செய்ய JAC வலியுறுத்தி உள்ளது . இது விசயமாக நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையை JAC சிறிது காலம் பொறுதிருந்து மேல் நடவடிக்கை எடுக்கும் .
3.PLI :- 
ஒரு நீண்ட நெடிய விவாததிற்கு பின் PLI கணக்கிட தனி நபர் உற்பத்தி திறனை மதிப்பீட்டில் கொள்ளாமல் தேசிய அளவில் மதிப்பீடு செய்ய இரண்டு மாத கால  அவகாசத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ் விஷயம் 23-07-2014 அன்று நடைபெற உள்ள PLI  கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் .
4.NEPP :-
01-10-2000 க்கு பிறகும் , புதிய பதவி   உயர்வு கொள்கை அமலாக்கத்திற்கு முன்பும் post based பதவி உயர்வு பெற்றதை முதல் பதவி உயர்வாக கொள்ள  கூடாது  என்ற  JAC கூறியதை  பரிசிலனை செய்ய  நிர்வாகம் ஒத்து கொண்டது .7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள்அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவிஉயர்வாகப்பெறலாம். இது TTA/DRIVER மற்றும் LDC/TOA மாறுதல்செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
5.பரிவு அடிப்படையில் ஆன பணி நியமனம் :
நிர்வாகம்  இப் பிரச்னையில் தங்கள் கரங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் கட்டப்பட்டு உள்ளன என்பதால் விதிகளை தளர்த்தி பணி நியமனம் செய்ய முடியவில்லை என்று மீண்டும் இதே பதிலை கூறியுள்ளது .கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றதை JAC நிர்வாகத்திடம் சுட்டி காட்டியுள்ளது . இக் குறைபாட்டை களைய வெயிட்டேஜ்   பாயிண்ட் கணக்கிடும் முறையில்  விரைவில் மாற்றம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது .
6.LTC (LTC விடுப்பை காசாக்குவது)  மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் :-
நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது .
7. E 1 சம்பள விகிதம் அமலாக்கம் :-
இப்  பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலாக்கப்படும் என நிர்வாகம் உறுதி கூறி உள்ளது .
8.கேடர் பெயர் மாற்றம் :-
23-07-2014 அன்று இதற்கென அமைக்கப்பட்ட கூட்டு கமிட்டி கூடவுள்ளது .கூடிய விரைவில் கேடர் பெயர் மாற்றம் அமலாக்கப்படும் .
9. Regular Promotion of the officiating JTOs:-
இப் பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இப் பிரச்னை தீர்க்கப்படும் .
10. SC /ST ஊழியர்களுக்கு தகுதி மதிப்பெண் தளர்த்துவது :-
இது விசயமாக் DoP &T உத்தரவுகள் அமலாகுவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டி நிர்வாகத்திடம் கடுமையாக கூறியது .DIR (HR ) இது விசயமாக  தேவையானதை செய்வதாக உறுதி கூறியுள்ளார் .
11.30% Superannuation Benefits to the Directly Appointed Employees:-
நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது .  
12. Review of JTO and JAO results :-
JAO தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க நிர்வாகம் மீண்டும் மறுத்து விட்டது . JTO கேள்வி தாளில் உள்ள தவறுகளை களைய சென்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அனைத்து பொது மேலாளர்களுக்கு கடிதம்  அனுப்பாமல் உள்ளதை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் உடனடியாக கடிதம் அனுப்ப ஒத்து கொண்டது .
13.புதிய ஆளெடுப்பு :-
இந்த  பிரச்னை விசயமாக ஒரு ஆலோசனை நிறுவனத்திடம் கருத்து கேட்கப்படும் .
14. விடுபட்ட தற்காலிக ஊழியர் நிரந்தரம் :-நிர்வாகம் இக் கோரிக்கையை உச்ச நீதி மன்ற உத்தரவை கூறி  ஏற்க மறுத்து விட்டது .
15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் EPF/ESI பிரச்னை :-
பல மாநிலங்களில் கார்பரேட்  அலுவலக உத்தரவுகள் இது விசயமாக அமலாவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டியது .DIR (HR ) இப் பிரச்னை விசயமாக மாநில நிர்வாகங்களிடம் விளக்கம்  கேட்டு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார் .
16. Permitting the Non-Executives to appear Management Trainee Exam:-
23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின்படி முதல் பரிட்சைக்கு பின் Management Trainee ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய பரிசீலிக்கப்  படும் .    
17. Promotion based on personal up gradation of the officials who had completed Telecom Mechanic Training.:-
நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது
18. Revision of the wages of the TSMs based on IDA payscales. 
நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது .ஆனால் CDA ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்வதிலும் சரியான நடை முறை இல்லாததை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளும் என உறுதி கூறியுள்ளது .
19. Filling up of SC/ST backlog vacancies:-
இது  விசயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஒத்து  கொண்டுள்ளது .
20. முதல் சம்பள மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலி :-
இப் பிரச்னை DOT ஒப்புதலுக்கு சென்றுள்ளது .
21.பணியில் உள்ள ஊழியர்களுக்கு 78.2% IDA இணைப்பால் கிடைக்க வேண்டிய  நிலுவை தொகை :
இப் பிரச்னை விசயமாக DOT க்கு நமது கார்பரேட்  அலுவலகம் DO கடிதத்தை DOT க்கு அனுப்பி உள்ளது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .
22. விடுபட்ட அனைவர்க்கும் ப்ரீ சிம் :-
BSNL நிர்வாக கமிட்டியில் இது ஒப்புதல் பெறப்பட்டு விட்டது .இன்னும் ஓரிரு தினங்களில் உத்தரவு வெளியிடப்பட்டு விடும் என நிர்வாகம்  கூறியுள்ளது .
23. அலவன்சுகளை உயர்த்துவது :-
நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது .
24.78.2% IDA இணைப்பு அடிப்படையில் பென்சனை உயர்த்துவது :-
இப் பிரச்சனை DOT யிடம் நிலுவையில் உள்ளது .
25. JTO /JAO/TTA/TM தேர்வுகளில் பங்கெடுக்க தகுதியை தளர்த்துவது 
கார்பரேட்  நிர்வாகம் இது விசயமாக ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து கொண்டு உள்ளது என தெரிவித்து உள்ளது .
26. Issuing of presidential orders to the employees whose training started during DoT period:-
இப் பிரச்னை ஏற்கனவே  DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .
27.கால் சென்டர் பணிகளை நமது ஊழிய்ரகளிடம் வழங்குவது :-
இவ் விசயத்தை பரிசீலிக்க நிர்வாகம் ஒத்து கொண்டு உள்ளது .
28.Option to the Non-Executives, for fixation of pay on promotion, on the date of next increment which fell after 01-10-2000.
இப் பிரச்னை ஏற்கனவே  DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது. இது விசயமாக சம்பள பிடித்தம் செய்வதை நிறுத்த உத்தரவு  வெளியிட வேண்டும் என JAC  வலியுறுத்தியது . ED(Finance) விடுமுறையில் இருப்பதால் உத்தரவு வெளிய காலதாமதம் என்று நிர்வாகம் கூறியுள்ளது .
29. டெலிகாம் தொழிற்சாலை புத்தாக்கம் :-
இது விசயமாக தேசிய கவுன்சிலில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை  பரிசீ லிக்கப்படவில்லை என்பதை JAC சுட்டி காட்டியது .கொல்கத்தா டெலிகாம் பாக்டரியில்  கிளிப்  தொலைபேசிகள் உற்பத்தியில்  காலதாமதம் ஆவது  சுட்டி காட்டப்பட்டது . இப் பிரச்சனை  ED(NB) அவர்களுடன் மேலும் விவாதிக்கப்படும் .
30. Revision of the payscales of the cadres of Sr.TOA, Telecom Mechanic, Driver, etc :-
இவ் விசயமாக விவாதிக்க கமிட்டிகள் உருவாக்கப்பட்டு இப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க JAC கேட்டு கொண்டது .நிர்வாகம் இதற்கு ஒத்து கொண்டது .

No comments: