Thursday 26 June 2014

26.06.14 வதிலையில் செயற்குழுவும்+ கிளைகளின் மாநாடும்.

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மாவட்டசங்கத்தின் செயற்குழுவின் கூட்டம் 26.06.14 வியாழன் அன்று, மாவட்டத்தலைவர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் தலைமையில், வத்தலக்குண்டு நகரில் உள்ள "துரை புஷ்பம் (பாபு)மஹாலில்" மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
நமது BSNLEU சங்க கொடியை மாவட்ட அமைப்புச் செயலர்,தோழர்.எஸ். காசிராஜன் அவர்கள், திண்டுக்கல் ஜே.ஜோதிநாதனின் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே, ஏற்றிவைத்து சிறப்புச் சேர்த்தார்.செயற்குழு கூட்டத்தில் 12 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மிக,மிக சிறப்பம்சமாகும். செயற்குழுவை, மாவட்ட உதவிச்செயலர் தோழர். ஆர்.ரவிச்சந்திரன் துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். மாவட்ட துணை பொருளர்  தோழியர். எஸ். எம். புஷ்ப்பராணி, அஞ்சலி உரை நிகழ்த்தினார், செயற்குழுவின் ஆய்படுபொருளின் மீதான அறிமுக உரையை மாவட்ட செயலர் எஸ்.சூரியன் நிகழ்த்தினார்.

நமது மாவட்ட செயற்குழுவையும், "வதிலை + நிலவை"  கிளைசங்கங்களை யும் வாழ்த்தி, கோட்டப்பொறியாளர் திருமதி.A.விசாலாட்சி அவர்களும், துணை கோட்ட பொறியாளர் திரு.A.செல்வரத்தினம் அவர்களும் உரையாற் றினர். 
செயற்குழுவில் ஆய்படுபொருளின் மீதான விவாதத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் பங்கெடுத்தனர். குறிப்பாக அமைப்பு நிலை குறித்தும், மாநில சங்கம் அறிவித்துள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள போராட்டங்கள் குறித்தும், திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை சிறப்பாகிடவும், முழுமையான பங்கேற்பினை உத்தரவாத படுத்திடுவது  குறித்தும்  பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர்.
மாவட்ட செயற்குழுவில் மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ்.ஜான் போர் ஜியா நிறைவுரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் எஸ்.சூரியன் செயற்குழு விவாதத்தில் வந்திருந்த கருத்துக்களை தொகுத்து உரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி அனைவருக்கும்   நன்றி   கூறினார்.
வந்திருந்த அனைவருக்கும் சுவையான, சிறந்த உணவளித்து அன்போடு உபசரித்து அனைத்து வகையிலும் சிறப்பாக செய்திட்ட "வதிலை + நிலவை" இரண்டு  கிளைச் சங்க தோழர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனிய நினைவோடு, உற்சாகம் பொங்க தேனி ரெவன்யு மாவட்டத்  தோழர்கள் அடுத்த மாவட்ட செயற்குழுவை, தேனி கோட்ட கிளைகள் நடத்தித்தரும் என பலத்தகர கோஷத்திற்கிடையே அறிவித்தார்கள்.



அதன்பின்,வத்தலக்குண்டு,நிலக்கோட்டைமற்றும்TNTCWUஆகிய கிளைகளின் மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. முறையாக ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்கு உறுப்பினர்கள் ஏற்பிற்கு  சமர்பிக்கப்பட்டு, ஒருமனதாக ஏற்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலர் சூரியன் நடத்தினார். வத்தலக்குண்டு கிளைக்கு புதிய நிர்வாகிகளாக தலைவர்,செயலர்,பொருளர் முறையே, தோழர்கள்   K.மகாராஜன்TM/BTL,     A.பிச்சைகண்ணுTM/BTL,     M.பழனியாண்டி      TM/BTL  ஆகியோரும்,  நிலக்கோட்டை   கிளைக்கு  புதிய நிர்வாகிகளாக V.சௌந்தரராஜன்TM/AYK, M.ஸ்டெல்லா மேரி Sr.TOA, R.ரவிச்சந்திரன்TM/NLO ஆகியோரும்,TNTCWU கிளைக்கு புதிய நிர்வாகிகளாக,A. சையது இமாம்TM/BTL , C.ஆண்டிச்சாமிCLR/BTL, நீதி முருகன்CLR/MNGU ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
---என்றும்  தோழமையுடன் ....எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: