Thursday 19 June 2014

திருப்புமுனை ஏற்படுத்திய திருப்பாலை ஆர்ப்பாட்டம் ...

அருமைத் தோழர்களே ! அநீதி கண்டால் வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடு! என்று நமது தொழிற்சங்க முன்னோடிகள் நமக்கு கட்டியுள்ள பாதையில், மதுரை திருப்பலை துனைக்கோட்டத்தில் SDE/JTO இருவரும் நடத்திய தனிக்காட்டு ராஜாங்கத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் முகத்தான், பாரதி பாஷையில் சொன்னால்....ஆகா...வென எழுந்தது யுகப்புரட்சி என்பதுபோல் 19.06.14 வியாழன் காலை 10 மணிக்கெல்லாம் அனைத்து சங்கங்களின் சார்பாக 7 பெண்கள் உட்பட 100-க்கும் மேல்  திரண்ட தோழர் களின்  கூட்டம்   திருப்புமுனையை  ஏற்படுத்தியது  திருப்பாலை ஆர்ப்பாட்டம் என்றால் அது மிகையாகாது ...
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுத்தலமையாக தோழர்கள், மணிமுத்து, நாகராஜன், ஜெயபாலன், ஜோசப் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். தோழர்.சந்திரசேகர், வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.விண்ணதிரும் கண்டன கோஷங்கள் உணர்ச்சி பூர்வமாக எழுப்பப்பட்டது.அதன்பின் கண்டன உரை . . .
TEPU - மாவட்டச் செயலர் தோழர்.என்.முருகன்,
FNTO- மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.முத்துகுமார்,
NFTE- மாவட்டச் செயலர்  தோழர்.எஸ்.சிவகுருநாதன், 
NFTE- மாவட்டத் தலைவர் தோழர்.கே.முருகேசன்,
BSNLEU-மாவட்டத் தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ்,
BSNLEU-மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன்,
ஆகியோர் அனைத்து ஊழியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் எழுச்சியுரை நிகழ்த்தினர். இறுதியாக தோழியர்.வசந்தா, கிளச்சங்கங்களின் அழைப்பினை ஏற்று போராட்டத்தில்    கலந்து கொண்டு தோழமையை நல்கி ஆதரவை வெளிப்படுத்திய  அனைவருக்கும் நன்றி  கூற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நிறைவுற்றது.
அதன்பின் மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் திருப்பாலை SDE/JTO மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து சங்கங்களின் சார்பாக வலியுறித்தியுள்ளோம். நமது உணர்வுகளை புரிந்து கொண்ட பொது மேலாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மேலும் போற்றி பாதுகாப்போம்.
 வாழ்த்துக்களுடன் ----எஸ். சூரியன், ...D/S-BSNLEU. 

No comments: