Monday, 16 June 2014

சந்தேகம் . . . சாமிக்கண்ணு . . .

சந்தேகம் சாமிக்கண்ணு

தென்னக நதிகளை இணைத்தால் நதிநீர்ப் பிரச்சனை தீரும் - தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்.
.சா - இப்ப இருக்குற காவிரிப்பிரச்சனைல ஒண்ணும் பண்ண மாட்டோம்னு சொல்ல வர்றீங்களா..?
வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது - மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்.
.சா - என்ன... மக்கள் தலைமேல போட்டுட்டு போயிருவீங்க, அவ்வளவுதான..?
காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நேரங்களில் ஏழைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் - அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா.
.சா - இவரு சிரமப்பட்டு பாதுகாக்குற ராபர்ட் வதேராவச் சொல்றாரோ..??
கூடங்குளத்தில் இருந்து 1,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் - முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
.சா - ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அதச் செய்யுற வாய்ப்பு உங்களுக்கே இருந்துச்சே..?

No comments: