Wednesday 18 June 2014

17.06.14 தீர்க்கமான முடிவுகளுடன் தமிழ் மாநில செயகுழு . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் 17.06.14 காலை 10.20 மணிக்கு சென்னை CITU கூட்ட அரங்கில், இம் மாதம் பணிநிறைவு செய்ய இருக்கும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அருமைத்தோழர்.இராமர்,அவர்கள்  நமது BSNLEU சங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.செயற்குழு கூட்டத்திற்கு தோழியர். இந்திரா தலைமையேற்றார். மறைந்த மக்கள் தலைவர் அருமைத்தோழர் ஆர்.உமாநாத் அவர்களுக்கு, மாநில அமைப்புச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் அஞ்சலியுரை நிகழ்த்த, மாநில செயற்குழு இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது.மாநில பொருளர் தோழர்.கே.சீனிவாசன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநிலச் செயலர்,தோழர். எஸ். செல்லப்பா செயற்குழு அறிக்கைமீதான, அறிமுக உரை நிகழ்த்தினார். அதன்பின் நமது பொதுச் செயலர், தோழர்.பி. அபிமன்யு அவர்கள் செயற்குழுவை துவக்கிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். ஆய்படுபொருளின் மீது நமது மதுரை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் உட்பட 29 பேர் விவாதத்தில் பங்கேற்றனர். இறுதியாக மாநில செயற்குழு கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்தது.....
  *  MS-STY  தேர்தலில் நமது தோழர்களின் செயல்பாட்டை பாராட்டியது.
  *  CHQ-க்கு ரூ.100 நன்கொடையை பூர்த்தி செய்வது.
  *  மாநில மாநாட்டை திருச்சியில் OCT-10,11&12 தேதிகளில் நடத்துவது.
  *  மாநில மாநாட்டு நன்கொடையாக  உறுப்பினரிடம் ரூ.250 வசூலிப்பது.
  *  மாநில அமைப்பு செயலர் பதவி மதுரை மாவட்டத்திற்கு கொடுக்கப்படும்.
  *  EPF-PASS BOOK Open செய்ய அனைத்து மாவட்டங்களில்  நடவடிக்கை.
  *  புதிய உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது.
  * பிரச்சனை தீர்விற்கு மாநிலம் முழுவதும் SSA-யில்.....
     04.07.2014 ஆர்ப்பாட்டம் நடத்துவது.
     11.07.2014 தார்ணா நடத்துவது.
தோழர்.பரமேஸ்வரன் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.
 

No comments: