Sunday 22 June 2014

21.06.14 நடந்தவை . . . தேனி கிளைமாநாடு . . .

BSNL எம்ப்ளாயீஸ் யூனியன் தேனி கிளை7வது மாநாடு 

அருமைத் தோழர்களே ! நமதுதேனிகிளை சங்கத் தின்மாநாடு, தேனி  தொலை பேசி நிலையத்தில் 21.06.14 சனிக்கிழமையன்று  மாலை தோழர்.பி.தேசிங்கு, தலை மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பணி நிறைவு நிறைவு பெற்ற தோழர். எஸ்.சிங்கார வேல் நமது BSNLEU சங்க கொடியை ஏற்றிவைத்தார். தோழர். கே.ஹீயூமாயூன் கபீர், தியாகிகளுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழர்.J.மைகேல் சிரில் ராஜ், வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அதன் பின் கிளை மாநாட்டை துவக்கிவைத்து, மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரை நிகழ்த் தினார்.


  மாநாட்டை வாழ்த்தி தோழர்கள், T.K.சீனிவாசன்,மாவட்ட அமைப்புசெயலர், P.சந்திர சேகர்,V.செந்தில்குமார்,UTM, ஆர்.நாராயணன்,TEPU, G.கணேசன்,PKM, N.முத்துரத்தினம்,ADT ஆகியோர் உரையாற்றினார்கள். அதன்பின் பணி நிறைவு பெற்ற தோழர்.எஸ்.சிங்காரவேலுக்கு,தேனி  கிளை சங்கத்தின் சார்பாக பணிநிறைவு பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
பின்னர் ஆண்டறிக்கை,நிதிநிலை ஆய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டு,முறையாக ஏற்கப்பட்டது.மாவட்ட செயலர்.தோழர்.எஸ்.சூரியன் நிர்வாகிகள் தேர்வை நடத்திவைத்தார்.புதிய நிர்வாகிகள் , தலைவர்,செயலர்,பொருளர் முறையே, தோழர்கள் தேசிங்கு,மைகேல் சிரில்ராஜ்,சுப்புராஜ் உள்ளிட்ட 15 நிர்வாகி களும்,ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, தோழர்கள்,சி.செல்வின் சத்தியராஜ்,மாவட்ட தலைவர், எஸ். ஜான் போர்ஜியா, மாநில துணைத் தலைவர் ஆகிய இருவரும் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர்.எஸ்.ராஜமாணிக்கம் நன்றிகூற தேனி கிளை மாநாடு இனிதே நிறைவுற்றது.
புதிய நிர்வாகிகள் பனி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments: