அருமைத் தோழர்களே! 31.05.2014 தோழர்.D.M-க்கு பாராட்டுவிழா என்பதால் அன்று மாலை முதல், இரவு வரை போடி தொலைபேசி நிலையத்தில், போடி நகரமே திரண்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. BSNL அலுவலக TRC-யில் தான் பாராட்டு விழா என்பது அழைப்பாக இருந்தது. ஆனால் சங்கபேதமின்றி BSNL-அதிகாரிகள்+ஊழியர்களில் முன்னாள், இந்நாள் பணியாற்றியவர்கள் மட்டும் அல்ல, நகரத்து அனைத்துப்பகுதி அன்பர்களும், CITU - தோழர்.S.K.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள், தோழர். D.முருகன் குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள், நமது BSNLEU மாநில, மாவட்ட, கிளைச்சங்கநிர்வாகிகள் இப்படி அனைத்து பகுதியினர்களும் குவிந்த, சிறப்பான விழாவாக அமைந்தது கண்டு அனைவரும் ஆனந்த கண்ணீர் மல்க வாழ்த்தினர்.
நெஞ்சு நெகிழவைத்த நிகழ்ச்சி
தோழர்.D.முருகனை மேற்கண்ட அனைவரும் பாராட்டியதில் ஒன்றும் ஆச்சரியமோ, அதிசயமோ அல்ல, மாறாக தோழர்.D.M சந்தாதாரர்களுக்கு செய்த சேவையை பாராட்டி பெயர்கூட அறிவிக்க விரும்பாத ஒரு பெரிய மனிதர் நேரில் தானாக முன்வந்து பாராட்டி பரிசு வழங்க வந்தவிபரத்தை நமது BSNLEU தேனி மாவட்ட தலைவர்களில் ஒருவரான போடிதோழர்.பி .சந்திரசேகர் அறிவித்தபோது அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் ஓசை ஒலித்தது.
தோழர்.D.முருகன் பணிநிறைவு
தோழர்.D.M. என்று சொன்னால், அவரின் அடையாளம் சிரித்த முகம், அமைதியான குணம், யாராக இருந்தாலும் அணைவருக்கும் உதவும் பண்பு, கொடுப்பதில் கொடைவள்ளல், இலாக்கா சேவையில் முன்மாதிரி, தொழிற்சங்கத்தின் மீது பற்று, தான் மாணவபருவத்திலேயே ஏற்றுகொண்ட மார்க்சிய கொள்கை மீது அசைக்கமுடியாத பிடிப்பு இப்படி அணைத்து நல்ல குணங்களுக்கும் சொந்தக்காரர்.
நமது BSNLEU போடிக்கிளை, குறிப்பாக தோழர்.பி. சந்திரசேகர் சிறப்பான நிகழ்ச்சிநிரலை ஏற்பாடு செய்து இருந்தார். நமது கிளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. நமது BSNLEU சார்பாக தேனி மாவட்ட அணைத்து கிளைகளும் வாழ்த்தின, நமது மாநில துணைத்தலைவர் தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா, மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ், மாவட்டசெயலர், தோழர். எஸ். சூரியன் ஆகியோர் வாழ்த்தி கதராடை அணிவித்தனர். அதன் பின் தோழர் முருகன் ஏற்புரையோடு நமது மாநில, மாவட்ட சங்கங்களுக்கு தலா ரூ.1000 நன்கொடை வழங்கினார். தோழர்.D.M அவர்கள் 41 ஆண்டுகள் சிறப்பான இலாக்கா சேவைமட்டும் அல்ல, தொடர்ந்து தொழிற்சங்க பணியும் செய்து இருக்கின்றார். அவர்பணி ஓய்வு காலம் சிறக்க மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது.
....என்றும் தோழமையுடன் ---எஸ். சூரியன், D/S-BSNLEU.
No comments:
Post a Comment