கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், நடைபெற்று வரும் கட்டணக்கொள்ளையை தடுத்துநிறுத்திடக் கோரியும், தாய்மொழியே பயிற்று மொழியாக்கிட சட்டமன்றத்தில் புதிய சட்டமியற்ற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதுமுள்ள கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திட வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகள் இலவச சேர்க்கையை மறுத்து வருவதோடு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவசசேர்க்கை முறையாக நடைபெறுவதை கல்வித்துறை கண்கா ணித்து உறுதிப்படுத்திட வேண்டும். கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதைஉறுதிசெய்ய வேண்டும்.
பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பள்ளிமேலாண்மைக்குழு முறை யான வழிகாட்டுதலோடு செயல் படுத்தப்பட வேண்டும்.நீதியரசர் சிங்காரவேலர் தலைமையிலான தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை குறைப்பதோடு, அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை வசூலிக்காமல் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் ரூபாய் என தாறுமாறாய் கொள்ளை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.முறையான கற்றலுக்கு பயிற்று மொழி தாய்மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அறிவியல் அணுகுமுறையை பின்னுக்குத் தள்ளி ஆங்கில வழிக்கல்வியை அரசே முன்னெடுப்பது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.இதனை உணர்ந்து தாய்மொழியே பயிற்று மொழியாக்கிட சட்டமன்றத்தில் சட்டமியற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழகம்முழுவதுமுள்ள கல்வித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கம்போராட்டங்களை நடத்தி யுள்ளது.சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
காவல்துறையினர் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்திக்க விடாமல் தடுத்ததோடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி அராஜகமான முறையில் போலீஸ் கைது செய்தனர்
No comments:
Post a Comment