Monday 16 June 2014

சட்டம்-ஒழுங்கு-மம்தா தவறினால் மத்திய அரசு தலையிடும்...

மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் சார்ந்த கொலைகளும், ஆள் கடத்தலும் பெருகி வருகின்றன. இந்நிலையில், அங்கு நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை பார்வையிட பா... மேலிடம், சில பார்வையாளர்களை 2 குழுக்களாக அனுப்பியுள்ளது. இதில் கோபம் அடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இதேபோல் பா... ஆளும் மாநிலங்களில் அரசியல் சார்ந்த கொலைகள் நடக்கும்போது, எங்கள் கட்சி எம்.பி.க்களை அனுப்ப வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்த பா... தேசிய செய்தி தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங், ''இது சுதந்திர நாடு. அவரது விருப்பப்படி மம்தா எது வேண்டுமானாலும் செய்து கொள்லலாம். ஆனால், பா...வையும் எதிர்கட்சிகளையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, தனது மாநிலத்தில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் அக்கறை செலுத்தி, அவர் நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
தற்போது, சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ள மாநிலங்களாக மேற்கு வங்காளமும், உத்தரப்பிரதேசமும் மட்டுமே உள்ளன. அவர் தனது கட்சி எம்.பி.க்களை உத்தரப்பிரதேசத்துக்கு வேண்டுமானால் அனுப்பி நிலைமையை பார்வையிட செய்யட்டும். ஆனால், மேற்கு வங்காளத்தில் பா...வினர் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து, மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால், அரசியலமைப்பு சட்டப்படி, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.  

No comments: