ஒப்பந்த
ஊழியர் 5 வது மாநில மாநாடு 01.10.2013
இன்று நாகர்கோயிலில் கோலாகலமாக தொடங்கியது. 527 சார்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் .தேசிய கோடியை முன்னால்
மக்களவை உறுப்பினர் தோழர். பெல்லார்மின் ஏற்றி வைக்க, சங்க
கோடியை தோழர்.பி.மாணிக்கமூர்த்தி ஏற்றினார் . மாநாட்டில் வரவேற்பு உரையை தோழர் பெல்லார்மின் நிகழ்த்த மற்றும் தோழர். M. நாராயணசாமி, நிகழ்த்திய தியாகிகள் அஞ்சலி உரைக்கு பின் நமது BSNLEU பொது
செயலர் தோழர் அபிமன்யு மாநாட்டை
தொடக்கி வைத்து உரை ஆற்றினார். பொது செயலர்
தனது உரையில் ஒப்பந்த ஊழியர்சங்கம் உருவாவதிற்கும் அதன் வளர்சிக்கும் பல கோரிக்கைகள் வெற்றிக்கும் BSNLEU சங்கத்தின் பங்களிப்பை சுட்டி காட்டினார் . நமது தலைமை
பொது மேலாளர் திரு மொகமது அஷ்ரப்கான் பேசும் போது
ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் திறமைகளை வளர்க்க
வேண்டும் என கூறினார். நாகர்கோயில் பொது மேலாளர் திரு.
திருநாவுக்கரசு அவர்களும் உரை ஆற்றினார்கள் .
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு , தோழர்.M.முருகையா,GS,TNTCWU, மாநாட்டின் செயல்பாட்டறிக்கை வழங்கப்பட்டது. அதன்
பின்னர் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கி நடந்து
வருகிறது. மாநாடு நாளையும் நடைபெறும்.
No comments:
Post a Comment