Friday 10 October 2014

09.10.14 - மாவட்ட சங்க செயலக கூட்டம்...


அருமைத் தோழர்களே! நமது  மாவட்ட சங்கத்தின் செயலக கூட்டம்...
09.10.14 அன்று மாலை 6 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி திருச்சியில் நடைபெறும் நமது 7 வது தமிழ் மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட முழுவதும் கிளைகளி லிருந்து   இதுகாறும் வசூலான நன்கொடை ரூபாய் 80,000 மாநில சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்றும், மீதம் வசூலாகக் கூடிய நிதியை மாநில மாநாட்டில் அளிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, இன்னும் எந்ததெந்த கிளைகளில் நிதி வரவேண்டியுள்ளது என்ற விபரத்தையும் கூட்டத்தில் முன்வைத்தார்.
மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசியதோடு, ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் ஒப்பந்தம் மாவட்ட சங்கம் ஏற்படுத்திய விபரங்களை தெரிவித்ததோடு, மாநில மாநாட்டில் நமது சார்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியைவை குறித்து முன்வைத்தார். அதன்பின் வந்திருந்த அனைவரும் தங்களது ஆழமான, நியாயமான கருத்து களை பதிவு செய்தனர். இறுதியாக மாநில துணைத்தலைவர் தோழர். எஸ்.ஜான் போர்ஜியா நிறைவுரை நிகழ்த் தினார்.
  *  மாநில மாநாட்டிற்கான தராத கிளைகளில் கோரிப் பெற்று அளிப்பது .
  *  மதுரை SSA-க்கு  உரிய மாநிலநிர்வாகிகள் பிரதிநித்துவத்தை கோருவது.
  *  ஊழியர்கள் /நிறுவனத்தின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை முன்மொழவு.
  *  மாநில மாநாடு சிறக்க அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவது.
போன்ற முடிவுகளுடன் செயலக கூட்டம் இனிதே நிறைவுற்றது.
--- என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்...D/S-BSNLEU.

No comments: