Thursday 23 October 2014

அன்பிற்கினிய தோழர்களே! ஓர் முக்கிய வேண்டுகோள்.

 அன்பிற்கினிய தோழர்களே! ஓர் முக்கிய வேண்டுகோள்.காஷ்மீர் துயரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இதற்காக டெல்லியில் நமது அனைத்து சங்கங்களின் FORUM கூடி ஒன்றுபட்ட முடிவாக இந்திய நாடு முழுவதும் உள்ள BSNLஊழியர்களும், அதிகாரிகளும் ஒரு நாள் சம்பளத்தை காஷ்மீர் நிவாரண நிதியாக வழங்குவது என்ற முடிவை அனைவரும் அமல் படுத்தவேண்டியது நமது ஓவ்வொருவரின் முழுமுதல் கடமையாகும். இது குறித்து நமது CHQ, CIRCLE, DISTRICT அனைத்து அமைப்புகளும் கிளைகளுக்கு அறிவுரித்துள்ளது.
ஆனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசிலர் சம்பள பிடித்தம் வேண்டாம் எனக் கடிதம் கொடுத்துள்ள தாக மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. உடனடியாக ஸ்தல மட்டத்தில் உள்ள நமது நிர்வாகிகள் உடன் தலையிட்டு, யாரேனும் அப்படி ஒருசிலர் தவறாக இருந்தால் அந்த கடிதத்தை வாபஸ் பெறுவதற்கான முயற்சியை போர்கால முறையில் நடவடிக்கையை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தோழர்களே! பல ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போய்விட்டனர். பல ஆயிரக்கனக்கான பேர் வீடுகளை, சொத்துக்களை இழந்து நிற்கிறார்கள். எவ்வளவு பேர் காணாமல் போனார்கள் என்பதற்கான கணக்கே கிட்டவில்லை. எனவே,கருணை அடிபடையில் மட்டும் அல்ல, ஒரு தேச பக்த கடமையாக நிறைவேற்றுவோம் தோழர்களே.
  

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

காஷ்மீரின் துயரில் நாம் அனைவரும் பங்கு பெற்ற ஆக வேண்டும் ஐயா
அவர்களும் நம் சகோதரர்கள்தானே
நம் சகோதரர்களுக்கு நாம் உதவாவிட்டால், வேறு யார் உதவப் போகிறார்கள்