Thursday, 30 October 2014

தோழர் எம்.தங்கராஜ் நினைவஞ்சலி -சமூக நீதி கருத்தரங்கம்.

அருமைத் தோழர்களே! 2013-அக்டோபர்,29 ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது.  மதுரை மாவட்டத்தில்  நிலவிய  தீண்டாமைக்   கொடுமைகளை   எதிர்த்து அனைத்துப்  பகுதி மக்களையும் திரட்டி வலுவான இயக்கங்களை    நடத்திய   எம்.தங்கராஜ்தலித்மக்களுக்காக ஊராட்சித் தலைவர் பதவி   ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி,  கீரிபட்டி,  நாட்டாமங்கலம்   ஆகிய   கிராமங்களில்   ஜனநாயக   ரீதியாக தேர்தல்   நடை பெறவும்,  தேர்வு   செய்யப்பட்ட   தலித்   தலைவர்கள் பதவியில்  தொடரவும்முக்கியப் பங்காற்றினார்.
இதனால் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும் அவர் அஞ்சவில்லை.உத்தப்புரம் தீண்டா மைச் சுவரை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய எம்.தங்கராஜ்ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்தவராவார்விவசாய இயக்கத்தில் இருந்து 1980ஆம் ஆண்டுமுதல்  திறம்படசெயலாற்றினார்பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறைசென்ற எம்.தங்கராஜ்கிராமப்புறங்களில் நிலவிய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகபோராடிய ஒரு     சிறந்த   போராளியாகத் திகழ்ந்தார்.
அடித்தட்டு மக்களுக்காக தனது இறுதி மூச்சு வரை அயராது ஓடி ஓடி உழைத்த ஓய்வறியா போராளி அருமைத் தோழன் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களில் ஒருவரான எம்.தங்கராஜ் விபத்தில் மறைந்த தினமான 29.10.2014 புதன் மாலை கருமாத்தூரில்  தோழர் எம்.தங்கராஜ் நினைவஞ்சலி -சமூக நீதி கருத்தரங்கம் தோழர்.தேவராஜ் தலைமையில் நடை பெற்றது. 

சமூகநீதி சிறப்பு  கருத்தரங்கில் தோழர்கள், செல்லகண்ணு, பொன்னுத்தாய், சாமுவேல் ராஜ்,சி .ராமகிருஷ்ணன், பா.விக்ரமன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் தோழர்.எம்.தங்கராஜ் நினைவஞ்சலியோடு சமூக நீதி கருத்துக் களையும் வழங்கினர்.
நமது BSNLஊழியர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு அங்கம் என்ற அடிப்படையில் நமது சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன், மற்றும் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர். எம்.சௌந்தரும் கலந்து கொண்டனர்.


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழருக்கு வீர வணக்கம்