Friday 17 October 2014

NLC ஊழியர்களுக்கு ஆதரவு - நோக்கியாவிற்கு கண்டனம்...

அருமைத் தோழர்களே! அக்டோபர்-11,12&13 தேதிகளில் திருச்சியில் நடை பெற்ற நமது BSNLEU தமிழ் மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில், 40 நாட்களுக்கு மேலாக தங்களது பனி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி கொண்டிருக்கும் NLC ஊழியர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் பல 1000க்கணக்கான இளம் பட்ட தாரிகளின் உழைப்பை சுரண்டிவிட்டு திடீரென மூடு விழா துரோகத்தை அரங்கேற்றும்  - நோக்கியா நிறுவனத்தின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை G.M அலுவலகத்தில் 16.10.14அன்று மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.... இவ்வார்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை களைவிளக்கி, தோழர்.வி.கே.பரமசிவம், AIBSNLEA-CHQ,அட்வைசர்அவர்களும்,தோழர்.எஸ்.கணேசன்,SNEA-ACSஅவர்களும் உரையாற்றினர். BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் நிறைவுரை யாற்றினார். 35 பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு, இறுதியாக தோழர்.வி.சுப்புயலு,மாவட்ட உதவிச்செலர் நன்றிகூறினார். இதே போன்று நமது மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களிலும் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு குரல் எழுப்பினர்.... 




No comments: