Tuesday, 28 October 2014

மக்கள் விரோத மருந்து கொள்கை . . .

சமீபத்தில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அளித்த ஒரு பேட்டியில் மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அத்தியா வசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதற்கும், அவர் அங்கம் வகிக்கும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இல்லை.கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையின் மூலம் ஏற்கனவே விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்த 108 மருந்துகளின் விலைகளை சந்தையும், மருந்து நிறுவனங்களும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனைத்து தடைகளையும் நீக்கியது.இந்த அறிவிப்பு ஓர் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏற்கனவே மருந்துகளின் விலைகள் உயர்ந்து கொண்டுதான் உள்ளது. உதாரண மாக இருதய நோய்க்காக பொருத்தப் பட்ட `ஸ்டெண்ட்எனும் இருதயகருவியை அபாட் எனும் பன் னாட்டு நிறுவனம் ரூ.40,700 க்கு இறக்குமதி செய்து ரூ.1,20,000 க்கு இந்திய மக்களுக்கு விற்கிறது. என்ன விலை வித்தியாசம் பாருங் கள். கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம்.இந்திய நாட்டில் 4.1 கோடி மக்கள் சர்க்கரை நோயாலும், 6கோடி பேர் ரத்த அழுத்த நோயினாலும், 5.7 கோடி பேர் இருதய நோயினாலும் 22லட்சம் பேர் காச நோயினாலும், 11லட்சம் பேர் புற்றுநோயாலும், 22 லட்சம் பேர் எயிட்ஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டில் அரசு மருத்துவ மனை களில் போதுமான தரமான மருத்துவசேவைகள் இல்லாத காரணத்தி னால், மக்கள் தனியார் மருத்துவ மனைகளை நாடிச் செல்கின்றனர். தனி நபர் ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 36 சதவீதம் மருத்துவத் திற்காக செலவு செய்கிறார்.2004ல் இந்த செலவு மாதம் ரூ. 391 ஆக இருந்தது. 2012ல் ரூ. 1083 ஆக உயர்ந்துள்ளது. அரசு முறையான மக்கள் நலக் கொள்கைகளை அமல் படுத்தி இருந்தால் இத்த கைய செலவுகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சுகாதார மேம்பாடு, நோய் தடுப்பு திட்டங்கள், மருத்துவ உயர் சிகிச்சை, நவீன மருத்துவம் போன்றவற்றை நடை முறைப்படுத்தியிருக்க வேண்டும். இவற்றை அமல் படுத்திட 10.7 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் இந்திய அரசு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 3.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு அதுவும் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.கடந்த நாடாளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்தியாவை மாற்றுகின்றேன் என்று கூறி வந்தார்.
இந்திய பன்னாட்டு முதலாளிகளும் இவருக்கு ஆதரவாக களம் இறங்கிவெற்றி பெறச் செய்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். அமர்த் திய 6 மாதங்களில் மக்களின் வாழ்க் கையில் விளையாட தொடங்கி விட்டார். தன்னை ஆட்சியில் அமர்த்திய, முதலாளிகளுக்கு ஆதரவாக கொள்கைகளை திட் டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.உதாரணமாக கடந்த பல ஆண்டுகளாக இடது சாரிகள், முற்போக்கு அமைப்புகள் போராடி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் மருந்து விலை நிர்ணய ஆணை அமலுக்குவந்தது. அதாவது உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளை அரசே நிர்ண யிக்கும் என்பதுதான்.2014 மே மாதத்தில் 489 மருந்துகள் மருந்துவிலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதத்தில் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம், இருதய நோய், தடுப்பூசி போன்ற 108 மருந்துகளின் விலை களை மருந்து விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அரசு அறிவித்து அதன்படி விலை களும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் செலவு குறையும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அறிவிப்பு வந்தவுடன் பன்னாட்டு இந்திய நாட்டு மருந்து நிறுவன பெரும் முதலாளிகள் புலம்பினர்.
இந்திய பார்மசிட்டுகள் அலையன்ஸ் அமைப்பின் தலைவர் கே.கே.ஷா அவர்கள் இந்த விலை குறைப்பினால் 5500 கோடி ரூபாய்மருந்து நிறுவனங்களுக்கு இழப்புஏற்படும் என்றும், மொத்த வர்த்த கத்தில் 12 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்ட மோடி அரசு தனது எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டும் விதமாக உடனடியாக கடந்த 2014 செப்டம்பர் மாதம் 108 மருந்துகளின் விலைகளை அரசு நிர்ணயிக்காது என்றும், மருந்து நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளும் என்று அறிவித்தார். இந்த செயலின் அர்த்தம் என்னவெனில் இழப்பு ஏற்படும் என்று சொன்ன ரூ.5500 கோடியை மருந்துகளின் விலைகள் ஏற்றத்தின் மூலமாக ஏழை, எளிய மக்களின் தலையில் சுமத்தப்படும் என்பதுதான். அறிவிப்பு வந்தவுடன் மருந்து நிறுவனங்கள் விலைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளது. விபரங்கள் அட்டவணைக்குள் மருந்து நிறுவன முதலாளி களுக்கு இந்த சலுகை மட்டும் போதவில்லையாம் மேலும் பல்வேறு சலுகைகள் அரசு செய்து தர வேண்டும் என்று பிரமல் லபேராட்டரிஸ் இயக்குநர் அஜய் பிரமல் கூறுகிறார்.
அவர் இந்திய காப்புரிமை சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும், மருந்து பரிசோதனைகளில் உள்ள தடை களை நீக்க வேண்டும் , மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு அளிக்கும் லஞ்ச லாவண்யங்களை அரசு கண்டு கொள்ளக்கூடாது என்று வெட்ட வெளிச்சமாக கூறி யுள்ளார்.இந்த (மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நலனை காக்கும் கொள்கைகளை வகுக்கும் அரசாக இல்லை மாறாக பெரும் முதலாளிகளின் லாபத்தை பெருக்கும் ஆணைகளை பிறப்பிக்கும் அரசாக உள்ளது) இந்திய மக்களின் நலனை பாதுகாத்திட அரசு முன் வர வேண்டும். அதற்கான இயக்கங்களை, போராட்டங்களை அனைத்து பகுதி மக்களும் நடத் திட வேண்டும்.கே.சி.கோபிகுமார்.

No comments: