Thursday 9 October 2014

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் ஒப்பந்தம்...


அருமைத் தோழர்களே! நமது BSNLEU+TNTCWU மதுரை மாவட்ட சங்கங்களின்   செயல் பாட்டில்  மேலும் ஒருவரலாற்றுப்   பதிவாக மதுரை மாவட்டத்தில், BSNLலில் பனி புரியும் Man power மற்றும் House keeping  ஒப்பந்த ஊழியர்கள் 279 பேருக்கு  போனஸ் ஒப்பந்தம், 09.10.14 வியாழன் மதியம் 3 மணிக்கு  மதுரையில்உள்ள BSNL-Confernce Hall-லில் மதுரை GM அவர்கள் தலைமையில்   நடைபெற்ற (நிர்வாகம்+ஒப்பந்தக்காரர்+தொழிற்சங்கம்) முத்தரப்பு பேச்சுவார்த்தையில் புதிய போனஸ் ஒப்பந்தம்  ஏற்பட்டுள்ளது என்பதை மிக  மகிழ்வோடு பதிவு செய்கிறோம் ...
நமது மாவட்ட சங்கங்களின் சார்பாக முன்கூட்டியே, ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக் கோரி  அனைத்து தரப்பிற்கும் கடிதம் கொடுத்திருந்தோம். நமது தொடர் முயற்சியின் காரணமாக, மாவட்ட நிர்வாகம் முதலில் 06.10.14 அன்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. விடுமுறை ஏற்பட்டதால் , அடுத்த கட்டமாக 09.10.14 முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ததின் அடிப்படையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கீழ்கன் டோர் கலந்து கொண்டனர்.
            நிர்வாகத் தரப்பு 
  1. திருமதி. S.E. ராஜம், ITS-GM/BSNL                                        தொழிற் சங்க பிரதிநிதிகள்                                                                                              தோழர்.எஸ். ஜான் போர்ஜியா 
  2. திரு. G. மார்ட்டீன் தனராஜ், DGM(Hr)                           தோழர்.சி . செல்வின் சத்தியராஜ் 
  3. திருமதி. ராஜேஸ்வரி, DGM                                            தோழர்.எஸ். சூரியன் 
  4. திரு. அருணாச்சலம்,DGM(F&A)                                    தோழர். வி. சுப்புராயலு 
  5. திரு. நரேந்திர நாத்குமார் ,DGM                                     தோழர். ஆர்.சுப்புராஜ் 
  6. திருமதி. கிரிஜா, AGM                                                        தோழர்.என்.சோனை முத்து 
  7. திரு. துரைச்சாமி, PRO 
  8. திரு. முருகேசன், AGM 
  9. திரு. சேது ராமன், CAO 
  10. திரு. நாகேஸ்வரன், CSS                                                              ஒப்பந்த காரர்கள் 
                                                                                                                           சிவராமன் 
                                                                                                                            ரமேஷ் 
                                                                                                                            துரை 
           முடிவுகள்                                                                                           மருது

*    ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சட்டப்படியான 8.33 % போனஸ் வழங்கப்படும்.
*    போனஸ் பட்டுவாடாவை 15.10.14 க்குள் ஒப்பந்தக்காரர்கள் முடித்தாகவேண்டும்.
*    ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக டூல்ஸ், உபகரணங்கள் வழங்கப்படும்.
*    ஒப்பந்த ஊழியர்களுக்கு பஸ் கட்டணம் வழங்கப்படும்.
*    வாட்ச்மேன் பணிபுரிபவர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு நிர்வாகம் பரிசீலனை செய்யும்.
*    ஒப்பந்தகாரர்களுக்கு தொடர்ச்சியான டெண்டர் கிடைக்காவிட்டால், பனிக்காலம் வரை       போனஸ் வழங்கவேண்டும்
... என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் ---D/S-BSNLEU. 

No comments: