Wednesday, 8 October 2014

மங்கள்யான் கார்ட்டூன் :மன்னிப்புக் கோரியது அமெரிக்கா.

இந்தியாவின் செவ்வாய்கிரக ஆராய்ச்சியை கேலி செய்யும் விதமாக அமெரிக்காவின்நியூயார்க்டைம்ஸ்நாளிதழில்கேலிச் சித்திரம்வெளியானதைத் தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்அமெரிக்க நாளிதழ் மன்னிப்புக் கோரி உள்ளது.இஸ்ரோ விண்ணில் செலுத்திய மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்துள்ளது. மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக செயற்கைக் கோளை ஏவிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதை கேலி செய்யும் விதமாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் போன்ற பணக்கார நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வளரும் நாடான இந்தியா மிகக்குறைந்த செலவில் மங்கள்யான் செயற்கைக்கோளை ஏவியுள்ளதை கேலி செய்யும் விதமாக அந்த கேலிச்சித்திரம் அமைந்துள்ளது. எலைட் ஸ்பேஸ் கிளப் என்ற வீட்டில் மங்கள்யான் குறித்த நாளிதழ் செய்தியை 2 பேர் வாசித்துக் கொண்டிருப்பது போலவும் அந்த வீட்டு வாசல் கதவை பசுவுடன் நிற்கும் இந்திய விவசாயி ஒருவர் தட்டுவது போன்றும் கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. இந்தியாவை அவமதிக்கும் இந்த கேலிச்சித்திரத்தை அமெரிக்க வாசகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.இதைத்தொடர்ந்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. அந்த நாளிதழின் தலையங்க பக்க ஆசிரியர் ஆண்ட்ரூ ரோஸ்தால், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதால் நாளிதழ் சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.இந்த கேலிசித்திரத்தை வரைந்த ஹெங் கிம் சாங் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவின் மதிப்பை குறைக்கும் நோக்கத்தில் இந்த சித்திரத்தை வரையவில்லை.இந்தியா போன்ற நாடுகளினாலும்,குறைந்த நிதி பங்களிப்பில் வெற்றிகரமாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றநோக்கிலேயே இதுபிரசுரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும், அது எவரது மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பின் அதற்கு நியூயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்

No comments: