அருமை நண்பர்களே !26.10.14 ஞாயிறு மதுரையில் காலைமுதல் மாலைவரை 3-ம் ஆண்டு தமிழ் வலை பதிவர் திருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது என்றால் அது மிகையாகாது. நமக்கு வந்திருந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றுபார்த்தால் ... உண்மையிலே நான் அதிர்ந்து போனேன்.
நமக்கு கவனத்திற்கு வராத அல்லது நாம் கவனிக்காத பலநிகழ்வுகள் இருக்கின்றன என்ற புரிதல் பதிவானது எனக்கு... ஒரு இனம் புரியாத தயக்கத்துடன்தான் யாரும் அறிமுகம் இல்லாத இடத்திற்கு, அங்கே நுழைந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நமது BSNLதொலை தொடர்புத் துறையில் உள்ள தோழர்கள்.பாலகுமார், வா.நேரு,இடமலையான், முத்து, வடிவேல் முருகன்,ராய்,என ஏராளமானோர்,மேலும் நமது மாநில சங்க நிர்வாகி தோழியர்.புதுக்கோட்டை மல்லிகா இவர்கள் அனைவரையும் கண்ட எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அனைத்திற்கும் மேலாக என்ன வென்றால், அங்கு வெளியிடப்பட்ட 4 புத்தகங்களில் 3 புத்தகங்கள் ஆக்கம்,ஊக்கம் என ...மூன்றும் BSNLஇருந்தது.
கரந்தை ஜெயக்குமார் -- கரந்தை மாமனிதர்கள்
கிரேஸ் பிரதிபா -- துளிர்விடும் விழுதுகள்
மு.கீதா -- ஒரு கோப்பை மனிதம்
மூன்றிலும் BSNLபதிவு இருந்தது , இதற்க்கெல்லாம் மூலமாக இருந்த தோழர்.நா.முத்துநிலவன் அவர்களின் உரை காலையே நிகழ்ந்துவிட்ட படியால், என்னால் கேட்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்ததை, நமது தோழர்.விசென்ட் அவர்களின் அன்பு புதல்வி கிரேஸ் பிரதிபாவின் -- துளிர்விடும் விழுதுகள் புத்தக வெளியிட்டு நிகழ்வில் நீக்கிவிட்டார் . தோழர்.வா.நேரு அவர்கள், திருமதி.மு.கீதா அவர்களின் படைப்பான --ஒரு கோப்பை மனிதம் புத்தகத்தை வெளியிட்டு மிக அற்புதமாக பேசினார்.
கரந்தை ஜெயக்குமார் அவர்களின் 4 வது படைப்பாகிய கரந்தை மாமனிதர்கள் புத்தகத்தை வெளியிடு வதற்கான வாய்ப்பு BSNLEUமாவட்ட செயலர் என்ற முறையில் எஸ்.சூரியனுக்கு கிடைத்தது.
அன்பு சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நட்ப்பு கிடைத்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி - தொடர வேண்டுமாய்
மனநிறைவோடு வாழ்த்துகின்றேன்
தாங்கள் சொந்தமன்ணிற்கு -சமர்பித்துள்ள பெருமைமிகு பதிவை வெளியிட -எனக்கு
வாய்ப்பளித்த உங்களுக்கு - எனது
உள்ளப்பூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும்
தொடரட்டும்-உங்களது சமூகத் தொண்டு....
அன்பு சகோ.---மதுரை சூரியன்.
2 comments:
தங்களின் இப்பதிவு கண்டு நெகிழ்ந்து விட்டேன் ஐயா.
தங்களின் நட்பும், அன்பும் கிடைத்தமையை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.
தங்களது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
என்றும் வேண்டும் இந்த அன்பு.
விழாவில் தங்களைச் சந்தித்ததையும் கரந்தை ஜெயக்குமார் அவர்களுடைய நூலின் முதற்படியைப் பெற்றதையும் பெருமையாகக் கருதுகிறேன். தொடரட்டும் நமது வலைப்பூ நட்பு.
Post a Comment