CMD மற்றும் DOT செயலருடன் பேட்டி
24-10-2014 அன்று தோழர் நம்பூதிரி அவர்கள் நமது நிறுவன CMD மற்றும் DOT செயலர் அவர்களை சந்தித்து BSNL நிறுவன புத்தாக்கம் பற்றி பேசியுள்ளார்.பேட்டியின் போது கருவிகள் வாங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் மத்திய அரசு நமது BSNL நிறுவனத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் 45 மில்லியன்
மொபைல் டெண்டரை ரத்து செய்ததால் தான் BSNL வளர்ச்சி
குறைந்தற்கு காரணம் என்பதையும் , ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்த கட்டணமான ரூபாய் 6000 கோடியையும் , USO
fund ரூபாய் 1250 கோடியையும் அரசாங்கம் BSNL நிறுவனத்திற்கு தராமல் உள்ளதையும் தோழர் நம்பூதிரி அவர்கள் DOT செயலர் அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் . BSNL புத்தாக்கதிற்கு அரசு தேவையான உதவிகளை செய்திடும்
என DOT செயலர் பேட்டியின் போது கூறியுள்ளார் .சிறந்த சேவையையும் , நல்ல லாபத்தையும் ஈட்டிய கேரள மாநில BSNL ஊழியர்களை பாராட்டிய DOT செயலர் சேவையில் ஏற்படும் குறைபாடுகளை பற்றிய புகார்களை கூறி சேவையை மேம்படுத்தவேண்டிய அவசியத்தை தனக்கு டெல்லி மற்றும் UP இல் ஏற்பட்ட அனுபவங்களை கூறினார் .FORUM சார்பாக சேவையை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தோழர் நம்பூதிரி அவர்கள் விரிவாக விளக்கினார் . பென்சனருக்கு 78.2%
IDA இணைப்பு வழங்கப்படாமல் காலதாமதம் ஆவதையும் DOT செயலரிடம் தோழர் நம்பூதிரி சுட்டி காட்டி உடனடியாக இப் பிரச்சனையை தீர்க்க கோரினார் .M/s Deloittee Committee பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் சங்கங்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என நமது CMD அவர்களிடம் வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் இது விசயமாக எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்கவும் அவர் கேட்டு கொண்டார் . தொழிலாளர் நல சட்டங்கள் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் மத்தியில் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் CMD அவர்களிடம் தோழர் நம்பூதிரி அவர்கள் சுட்டி காட்டினார் . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் செய்திடவும் அவர் வலியுறுத்தி உள்ளார் .
உலக வங்கியைப் போல ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான வங்கி ஒன்றை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உட்பட 21 நாடுகள் இன்று கையெழுத்திட்டுள்ளன.சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று 21 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீனா அதிபர் ஜின்பிங் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.இதன் பின்னர் ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்புக்கான முதலீட்டு வங்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.வங்கதேசம், புருனே, கம்போடியா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட்டன.போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஆசியாவின் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த வங்கி வழங்கும். ஆனால் இத்தகைய முயற்சிக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.இதனால் அமெரிக்காவின் நேச சக்திகளான தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
No comments:
Post a Comment