Friday, 24 October 2014

சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்...

கடலும், ஏரியும் சூழ்ந்த சுற்றுலாத் தலமான பழவேற்காட்டில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவுக்கு உள்பட்ட பழவேற்காடு மிகப் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். பழவேற்காட்டைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பழவேற்காட்டில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய சிற்பங்களுடன் உள்ள டச்சு கல்லைறைகள், இஸ்லாமியர்கள் மசூதியில் அமைந்துள்ள சூரிய ஒளி நிழல் கடிகாரம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம், லைட் ஹவுஸ் குப்பத்தில் உள்ள கலங்கரைவிளக்கம், பறவைகள் சரணாலயம், கடலும், ஏரியும் இணையும் முகத்துவாரம் ஆகிய ரசிக்க வேண்டிய பகுதிகள் உள்ளன.
மேலும் இந்தியாவில் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி 15 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை: பழவேற்காட்டில் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதாரமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், இதனை நிர்வாகம் சரிசெய்யுமா?

No comments: