Saturday 25 October 2014

மேக் இன் இந்தியா’ . . .- . . . க்ளீன் இந்தியா! . . .

மேக் இன் இந்தியாமுழக்கத்திற்கு புதிய சின்னம். புதிய இணையதளம், தேசிய தரக் கழகத்திற்கு புதிய தலைவர் என ஜமாய்க்கிறார்கள். இந்து நாளிதழ் கட்டுரையொன்றில் பெங்களூர் தொழிலதிபரும், தட்கசீலா பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஒரு நிபுணர் சொல்வது போலசத்தம் அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான திட்டம் இல்லை.”ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாமல் உற்பத்திக்கான உந்துதல் எழாது. நிறைய முதலீட்டோடு, நீண்ட காலத் திட்டமாக வளர வேண்டிய ஆதாரத் தொழில்களை சூ..... மந்திரக்காளி..... என்று மோடியால் உருவாக்க முடியுமா? மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுகம்தான் இந்தியச் சரக்கு இறக்குமதியில் 55 சதவீதத்தைக் கையாள்கிறது. ஆனால் அங்கு வந்து இறக்குமதியாகிற சரக்குகள் தில்லிக்கு டெலிவரி ஆக 28 நாட்கள் எடுக்கிறதாம்.
2012ல் ஐஐஎம்- இந்திய போக்குவரத்துக் கழகம் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் போக்குவரத்து கியூ வரிசைகள் நீள்வதால் ஏற்படுகிற இழப்பு ரூ.60,000 கோடிகளாம்.இந்தியாவின் தேசியச் சுவையாக புளிப்பை அறிவிக்கலாம் போலிருக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் எத்தனையோ முறை புளித்திருந்தாலும் மறுபடியும் மறுபடியும் மக்கள் மயங்குகிறார்கள். இந்தியத் துணிகள் ஏற்றுமதிக்காக குர்கானில்அப்பேரல் இன்டர்நேசனல் மார்ட்” 250 காட்சி அறைகளோடு உருவாக்கப்பட்டது. தற்போது அதில் 94 காட்சி அறைகளில் பூட்டு தொங்குகின்றன. 81 காட்சி அறைகள் வேறு நோக்கங்களுக்கு வாடகைக்கோ, டெக்ஸ்டைல் கல்விக் கழக வகுப்புகளுக்கோ பயன்படுத்தப்படுகின்றன. மீதம் 75 காட்சி அறைகளில்தான் விற்பனை நடக்கிறதாம்.அவற்றிலும் பல நிரந்தரமாகச் செயல்படுவதில்லை.“மேக் ஃபார் இந்தியாஎன்ற இலட்சியமும் இணையாவிட்டால் மேக் இன் இந்தியா முழக்கம் வெற்றுக் கூச்சலாகிவிடுமென நிபுணர்கள் பலர் கருதுகிறார்கள். சந்தை விரிவானால்தான்மேக் ஃபார் இண்டியாஎன்று அழைப்பு விடுக்க முடியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரியும்போது கூட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தால் சந்தை எப்படி விரிவாகும்? ஃபிலிப் கார்ட்பில்லியன் டே” (நூறு கோடி வணிக தினம்)- அக்டோபர் 6 அன்று கொண்டாடிய போது மூன்று லட்சம் பேர் மதியம் 2 மணிக்குள்ளாக புகுந்து எல்லாவற்றையும் 70 சதம், 80 சதம் தள்ளுபடியில் காலி செய்தார்கள். இப்படி வணிகச் சங்கிலிகளை நொறுக்கி எறியும் போது ஒரு புறம் உயர்தட்டுச் சந்தை பலனடைந்தாலும் மறுபுறம் சங்கிலிகளோடு தொடர்புடைய மக்களின் வாங்கும் சக்தி சரிகிறது. சந்தை சுருங்குகிறது.இது ஒரு உதாரணமே. சந்தை விரிவாக்கம் இல்லாமல் மேக் ஃபார் இந்தியா எப்படி ஈடேறும்.பர்ஸ்ட் டெலவப் இந்தியா என்பது எப்டிஐ (FDI) க்கு மோடி தந்துள்ள விளக்கம். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கெல்லாம் சைசுக்கேற்ற பூட்டு தேடி அலைகிறார் மோடி. எச்.எம்.டி வாட்ச் கம்பெனியை மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்று தலைமுறைகளின் முதல் வாட்ச் என்ற சென்டிமென்டோடு இருந்த நிறுவனம் அது. எச்.எம்.டி மூடப்படுமென்ற செய்தி வந்தவுடன் பெங்களூரிலுள்ள அதன் காட்சி அறைகளிலெல்லாம் விற்பனை இரட்டிப்பானதாம். இவ்வளவு பிராண்ட் இமெஜ் உள்ள பெருமை மிக்க நிறுவனத்தைப் பாதுகாக்காமல் வளர்க்காமல் மேக் இன் இந்தியா என்றால் யார் நம்புவது?அவுட் சோர்சிங்தான் உலகமயத்தில் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
ஆனால் மின்சார வெட்டால் இந்தியாவிலுள்ள அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு ஓராண்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடியாம்.மலிவான உழைப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இன்னும் மலிவாக்க சட்டங்களைத் திருத்துகிறறோம். உரிமைகளைப் பறிக்கலாம். பணிப் பாதுகாப்பை பந்தாடலாம். உங்களின் லாபத்தை பெருக்குங்கள் என பன்னாட்டு மூலதனத்திற்கு வைக்கப்படும் தாம்பூலமேமேக் இன் இந்தியா.” பொருளியல் அரங்கம் .சுவாமிநாதன்
`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்; இதில் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்பட்டால், சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்; தேவைப்பட்டால், புதிய சட்டத்தை இயற்றுவோம். இது ஒரு தலையாயப் பிரச்சனை என்பதால், இதற்கு முன்னுரிமை கொடுப்போம்’-நாடாளு மன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி இது.`கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், ஒவ்வோர் இந்தியருக்கும் மூன்று லட்சம் ரூபாய் வழங்கலாம்என, தனது பிரச்சாரத்தில் முழங்கியவர் நரேந்திர மோடி. `வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்என எத்தனையோ முறை நாடாளுமன்றத்தையே முடக்கிய கட்சிதான் பாஜக.ஆனால், அது மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து, கடும் அதிர்ச்சி ரகம்.`கறுப்புப் பணம் தொடர்பாக வெளிநாடு களிடம் இருந்து பெற்ற தகவல்களையோ அல்லது நபர்களின் பெயர்களையோ பகிர்ந்துகொள்ள முடியாது. அப்படிச் செய்தால், சம்பந்தப் பட்டவர்கள் உஷார் ஆகி விடுவார்கள். மேலும் அது, சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும்என்கிறது மத்திய அரசு. கடந்த பல ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டுச் சலித்த அதே சப்பைக்கட்டு பதில். சொல்லும் வாய்கள்தான் வேறு வேறு. அப்போது காங்கிரஸ்; இப்போது பாஜக.வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்குவது நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தையே முடக்கிப்போடும் கொடும் செயல். அதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை. தேர்தலுக்கு முன்னர் வாக்கு வாங்க ஒரு பேச்சு; தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி செய்ய வேறு பேச்சு என்ற மோடி மஸ்தான் வேலை, ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.இப்போது நமது தேவை மிகக் கடுமையான நடவடிக்கை. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். பதுக்கப்பட்ட பணத்தை மீட்டு, பதுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் பாய வேண்டும். சொன்னதைச் செய்யுங்கள் மோடி. நமக்குத் தேவை நாவரசு அல்ல. நல்லரசு!வீதிகளில் படிந்துள்ள குப்பைகளை அகற்ற `க்ளீன் இந்தியாபிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தேசத்தின் நிர்வாக அமைப்பில் படிந்துள்ள ஊழல் என்னும் பெருங்கறையைத்துடைத்துஎறியகளம்இறங்கவேண்டியதே,மிக,மிக,மிகமிகமுக்கியம். ----நன்றி : ஆனந்தவிகடன் .

No comments: