1993 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 191 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளும் சட்டவிரோதமானவை என்று குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த இருபதாண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த ஊழல்கள், முறைகேடுகள் அனைத்தும் நவீன தாராளமயக் கொள்கையின் விளைவுகளே என நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. நவீனதாராளமயக் கொள்கையை நடைமுறைப்படுத்துகையில், கார்ப்பரேட் நிறுவனங்களும் மற்றவர்களும் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் வளம் பெறுவதோடு, தங்களது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
நிலக்கரியைத் தோண்டி எடுக்கபெருமளவு செலவு செய்வதாகக் கூறி, வங்கிகளும், இந்த நாடும் ஏமாற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டது. ஆனால் 10 சதவிகிதத் தொகை கூட முதலீடு செய்யப்படவில்லை. முறையான விசாரணை நடைபெற்றால், கறுப்புப் பணம் உருவாக்கப்பட்டு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும்.வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் மிகவும் கவலைத் தரத்தக்கவையாகும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், வங்கிகளிலிருந்து பெரும் தொகையை முதலீட்டிற்கெனப் பெற்றன. ஆனால். எந்த முதலீடும் செய்யப்படவில்லை.தற்போது இந்தக் கடன்களை வராக்கடன் பட்டியலில் சேர்க்குமாறு கடன் கொடுத்தவங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இது பற்றிய ஒரு மதிப்பீட்டின்படி, இரண்டு லட்சம் கோடி ரூபாய்இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதம் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எல்லா இழப்புகளையும் சேர்த்துக் கணக் கிட்டால் மொத்த இழப்பு 7 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். இது 2ஜி அலைக்கற்றையில் நடைபெற்ற கொள்ளையை விடப் பெரிய ஊழலாகும்.
நன்றி: `நியூ ஏஜ்’ தலையங்கத்தின் சில பகுதிகள்.
No comments:
Post a Comment