மதுரை சேடப்பட்டியில் பிறந்த அவர் நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என்று அழைத்தனர்.
தேனி சட்டப்பேரவை தொகுதியில் 1962-ல் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய வரலாற்றில் தேர்தலில் வென்ற முதல் நடிகர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு.முதுபெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (அக். 24) காலமானார். அவருக்கு வயது 86. ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா,
`பராசக்தி’,
`பூம்புகார்’, `வானம்பாடி’, `மனோகரா’, `ரத்தக்கண்ணீர்’, `முதலாளி’ உள்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் மனைவி தாமரை செல்வியுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவரை சில தினங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனில்லாமல் வெள்ளியன்று (அக். 24) காலை 11 மணி அளவில் அவர் இறந்தார்.அவரது உடல் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் இறுதிநிகழ்ச்சி மாலை 5 மணி அளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடந்தது.எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக அரசின் சார்பாக செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி இரங்கல்
முதுபெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கை வீரராகவும், குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் விளங்கிய எஸ்.எஸ். ஆர்., மறைவு தனது நெஞ்சை உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இரங்கல்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர், ஜெயலலிதா இரங்கல்தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் “லட்சிய நடிகர்” என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர்.
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப் பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ். ராஜேந் திரன் அவர்களின் இடத்தை இனிஎவராலும் நிரப்ப முடியாது” என்று கூறி யுள்ளார்.
1 comment:
ஒரு முறை கரந்தைத்தமிழ்ச் சங்க விழாவிற்கு, எஸ்.எஸ்.ஆர் அவர்களை அழைத்து வந்திருக்கிறோம்
நட்புடன் பேசினார்.இரண்டு மூன்று முறை அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளேன்.
முதுபெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
Post a Comment