Wednesday 15 October 2014

காவல்நிலையத்தில் தலித் இளைஞர் மரணம் ஆர்ப்பாட்டம்...

இளையான்குடி, அக். 15 -காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்; அவரது மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இமானுவேல் பேரவை சார்பில் புதனன்று இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா திருவள்ளுவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் மலைராஜ் (23). தலித் சமூகத்தைச் சேர்ந்த மலைராஜை இளையான்குடி காவல்துறையினர் அக்டோபர் 2-ம் தேதிகாலை 9 மணியளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். காவல்நிலையத்தில் இருந்த மலைராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.மலைராஜ் மரணத்திற்கு காரணமான இளையான்குடி காவல்துறையினரை கொலை குற்றத்தில் கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தியாகி இமானுவேல் பேரவை சார்பில் இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் ஜியாவுதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச்செயலாளர் ஆண்டனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நந்தன் உட்பட ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்துகொண்டனர்...

No comments: