Saturday, 25 October 2014

விலைவாசி ...கிடு...கிடு ...உயர்வு...கார்ட்டூன்...

ஆவின் நிர்வாகத்தைச் சீர்படுத்தினால் விற்பனை விலை உயர்வு தேவையிராது-தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் 
தமிழ்நாடு பால்வளத்துறை -ஆவின் நிர்வாகங்களைச் சீர்படுத்தினால் திருட்டு, முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் நிர்வாகச் செலவு குறையும். அதனால் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.முகமது அலி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு பாலுக்கு கொள்முதல் விலையில், பசும்பாலுக்கு ரூ.23லிருந்து ரூ.5 உயர்த்தி ரூ.28 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.31லிருந்து ரூ.4 உயர்த்தி ரூ.35 ஆகவும் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியளார்கள் சங்கத்தின் சார்பாக பசும்பாலுக்கு ரூ.30, எருமைப்பாலுக்கு ரூ.40 என கொள்முதல் விலை அறிவிக்க வேண்டுமென கேட்டிருந்தோம்.
நாங்கள் கேட்ட விலையை அரசு அறிவிக்கவில்லையென்றாலும் தற்போது அரசு அறிவித்துள்ள விலை உயர்வை வரவேற்கிறோம். பால் விற்பனை விலையில் ரூ.10 வீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பால் நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும். சமீபத்தில் காவல்துறை மூலம் வெளிவந்த பால் திருட்டு போல மேலும் பல திருட்டுகள், பல முறைகேடுகள் இத்துறையில் பல மட்டங்களிலும் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். இவைகளை தடுத்து நிறுத்தினால், நிர்வாகங்களை சீர்படுத்தினால் நிர்வாகச் செலவு குறையும். இந்த அளவிற்கு விற்பனை விலையை உயர்த்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.மேலும், நிறுத்தப்பட்ட கால்நடை தீவனங்களுக்கான மானியத்தை 50 சதவீதமாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும், கர்நாடக மாநிலத்தை போல இறந்த கறவை மாடுகளுக்கு ரூ.25,000 வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்களின் இதர கோரிக்கைகளையும் அரசு அமல்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: