கடந்த நிதியாண்டில், பா.ஜ.,வுக்கு, 41 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு, 36 கோடி ரூபாயும் நன்கொடை கிடைத்து உள்ளது.கடந்த 2013 - 14ம் நிதியாண்டில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த நன்கொடைகள் தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், முதன் முறையாக, 'சத்யா தேர்தல் அறக்கட்டளை' என்ற அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அந்த அமைப்பு கூறிஉள்ளதாவது:
வரி விலக்கு:தேர்தல் கமிஷன் தேர்தல் தொடர்பான ஏழு அறக்கட்டளை களை கண்டறிந்து உள்ளது. அவற்றில் ஒன்று, பார்தி குரூப்புக்கு சொந்தமான, எங்களது சத்யா தேர்தல் அறக்கட்டளை. வரி விலக்கு பெறுவதற்காக, எங்கள் அமைப்பு, மத்திய நேர்முக வரிகள் வாரியத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.எங்கள் அறக்கட்டளைக்கு, கடந்த நிதியாண்டில், நன்கொடையாளர்களிடம் இருந்து, 85 கோடியே, 40 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.அதில், பா.ஜ.,க்கு, 41.37 கோடி ரூபாயும், காங்.,க்கு, 36.50 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அறக்கட்டளைக்கு...:இதுதவிர, சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கு, 2 கோடி ரூபாய், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு, ௧ கோடி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு, 4 கோடி ரூபாயும், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.அரசியல் நோக்கங்களுக்காக, எங்கள் அறக்கட்டளை, 85 கோடியே, 37 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளது. நன்கொடையாக கிடைத்த மீதம்உள்ள தொகையானது, அறக்கட்டளையின் நிர்வாக செலவு களுக்கும், இதர செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
வங்கி பரிமாற்றம்: எங்கள் அறக்கட்டளைக்கு, பார்தி ஏர்டெல் நிறுவனம் (28 கோடி ரூபாய்), ஜூபிளியன்ட் லைப் சயின்சஸ் லிமிடெட் (3.88 கோடி), பார்தி இன்பிராடெல் லிமிடெட் (6 கோடி), இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (4 கோடி), டி.சி.எம்., ஸ்ரீராம் லிமிடெட் (2 கோடி), ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் (11 கோடி), டி.எல்.எப்., லிமிடெட் (20 கோடி) உட்பட, 18 நிறுவனங் கள் நன்கொடை வழங்கின.நன்கொடைகள் எல்லாமே, காசோலைகள் மூலமாகவும், வங்கி பரிமாற்றங்கள் மூலமாகவுமே பெறப்பட்டன. இவ்வாறு, அந்த அமைப்பு கூறிஉள்ளது..

No comments:
Post a Comment