Tuesday 7 October 2014

செல்போன் இன்டர்நெட் தனியார் கம்பெனிகள்-ஏர்டெல், ஐடியா, 100 சதம் கட்டணம் உயர்வு!

மொபைல் ஃபோன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 33 சதவிகிதம் வரை மொபைல் இன்டர்நெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இன்றை தருணத்தில்  செல்போன்கள் மூலம் இணையதளத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  அதிகரிக்க, அதிகரிக்க இணையதள கட்டணமும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் செல்போன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தவிர ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகின்றன. இம்மூன்று நிறுவனங்களும் மொபைல் இன்டர்நெட் சந்தையில் 57 சதவிகித பங்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.செல்போன், இன்டர்நெட், பாரதி ஏர்டெல், ஐடியா, கட்டணம் உயர்வு...ONE INDIA

1 comment:

AYYANARSAMY.R said...

AIRCELL OR AIRTEL ?