Saturday, 4 October 2014

ஆசிய - சீனாவுக்கு 151 தங்கம், 57 பதக்கம் இந்தியா 8வது...

தென்கொரியாவின் இன்ச்சியான் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் பார்வையாளர்களைக் கவர்ந்த கலை நிகழ்ச்சிகளில் ஒன்று.
 தென்கொரியாவில் நடைபெற்ற 17 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு பெற்றது. தென்கொரியாவின் இன்ச்சியான் நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 36 பிரிவுகளில்போட்டிகள் நடைபெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.நிறைவு பெற்ற இப்போட்டிகளில் 151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என 342 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பெற்றது. 79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் தென்கொரியா இரண்டாவது இடம் பிடித்தது. 47 தங்கம், 76 வெள்ளி, 77 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியது. 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் இந்தியா 8 வது இடத்தை பெற்றது.அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் 2018-ம் ஆண்டு நடைபெறும்.

No comments: