Sunday, 31 May 2015

கார்ட்டூன் . . . கார்னர் . . .



மாணவர் அமைப்புக்கு தடை: ஐஐடி-யை கண்டித்து மறியல்.

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போன்ற மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.திடீர் சாலை மறியல், போராட்டம், கைது நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டது.இதைக் கண்டித்து இன்று காலை (சனிக்கிழமை) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கார் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.அங்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் போலீஸார் - மாணவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோல், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய கைலாஷ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவப்படங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர்.
பிரச்சினை என்ன?
முன்னதாக, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு கடந்த வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் சென்னை ஐஐடியில் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த அமைப்பு அவ்வபோது கூட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த மாதம் குப்பம் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆர்.விவேகானந்தா கோபாலின் சொற்பொழிவு ஐஐடியில் நடை பெற்றது.இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் "மோடி அரசு இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறது, தொழிலாளர் நலச் சட் டங்கள், 100 சதவீத அந்நிய முதலீடுக்கு அனுமதி உள்ளிட்ட முடிவு களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டை சூறையாட வழி வகுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து சில மாணவர்கள் மத்திய மனித வளத் துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் மத்திய மனித வளத் துறை விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு:
ஐஐடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திமுக பொருளாளர் மு..ஸ்டா லின், மத்திய அரசும், கல்வி நிறுவனமும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகும்.தமிழக காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன், "அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம் சமூக சீர்திருத்த கருத்துகளையும், கல்வியை காவிமயமாக்கும் பாஜக அரசு பற்றியும் விமர்சித்தது. இதனை ஆதிக்க சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மாணவர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது சட்ட விரோதமானதாகும்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "சங் பரிவார் அமைப்புகள் கேள்வி கேட்டதாலேயே எந்த விசாரணையும் இன்றி, கருத்து சுதந்திரத்தைப் பறித்த ஐஐடி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகனும் இதை கண்டித்துள்ளார்.

மே-31-உலக புகையிலை எதிர்ப்பு தினம்...

மனது வைத்தால் சாத்தியமே... புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ரொம்ப கஷ்டமான காரியமல்ல. மனதிருந்தால் மார்க்கமுண்டு. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது நூலகம், கோவில், தியானம் என்று மனதை திசை மாற்ற பழகிக் கொண்டாலே போதும்
அபாயகரமான பாதிப்பு... புகைபிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன...

Saturday, 30 May 2015

மே 30 - தோழர் கே.ரமணி நினைவு நாள்...

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த தோழர் கே.ரமணி தொழிலாளிவர்க்கம் போற்றும் தலைவராக மலர்ந்தார். 
இன்று தொழிலாளிவர்க்கம் பெற்றிருக்கும் உரிமைகளைக் கட்டிக்காக்க தோழர்ரமணி போன்ற தலைவர்
கள் செய்த தியாகம்அளப்பரியது.பள்ளிக்கூடம் செல்வதற்கு வாய்ப்பில்லாத தோழர்ரமணி தொழிலாளர் 
தலைவராக உயர்ந்து, பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர். நாட்டின் விடுதலைப்போராட்ட
இயக்க நீரோட்டத்தில் பங்கேற்ற அவர் பிரிட்டிஷ்மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொடியஅடக்கு
முறைகளைச் சந்தித்தவர். ஏழு ஆண்டு சிறை வாழ்க்கை,மூன்று ஆண்டு தலைமறைவு வாழ்க்கை என
 அத்தனைஅடக்குமுறைகளையும் இன்முகத்துடன் ஏற்றவர்.
தொழிற்சங்க இயக்கத்திலும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியிலும் அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உயர்ந்த பொறுப்புக்களை ஏற்று திறம்பட பணிபுரிந்தவர்.பஞ்சாலைத் தொழிலாளர் களுக்காக 50 காலம்பாடுபட்டவர் தோழர் கே.ரமணி. நாடாளுமன்ற உறுப்பினராக,சட்டமன்ற உறுப்பினராக திறம்பட
 செயலாற்றியுள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்றப் பணியின்போதுதமிழகத்தின் தொழில் வளர்ச்சி, 
தொழிலாளர் நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகளை எழுப்பியுள்ளார்.தோழர் ரமணி
யின் அர்ப்பணிப்புமிக்க அரசியல் வாழ்வு தொழிலாளர்இயக்கத்தில் பங்கேற்று பாடுபடும் அனைவருக்கும்
 உத்வேகத்தைத் தரும். தோழர் கே.ரமணி நினனைவை போற்றுவோம்.

மே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .

1970- துவக்கப்பட்ட CITU இந்த மே 30ம் நாளோடு 45 ஆண்டுகளைபூர்த்தி செய்கிறது.ஏகாதிபத்தியம்பன்னாட்டு 
மூலதனம்,இந்தியஏகபோகம்நிலபிரபுத்துவம் என சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகவர்க்கப் போராட்டத்தை 
வலுப்படுத்தவும்தொழிலாளிவர்க்கத்திற்கெதிரான தத்துவார்த்த தாக்குதலை எதிர்த்தும்இந்திய மண்ணில்
சோசலிச சமுதாயத்தை உருவாக்கவும்  உறுதி பூண்டு CITU செயல்பட்டு வருகிறது.

புதியமுறையில்உழைப்புசுரண்டல்-உலகமயம்-தாராளமயம்-
தனியார்மயசுரண்டல்முறைகளுக்குமேலும்வலுவூட்டியுள்ளதுகாண்ட்ராக்ட்கேசுவல்பதிலிபயிற்சியாளர் என
பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் வேகப்படுத்துவதோடுநடைமுறையில் உள்ள 
ஊதிய விகிதம் கூட மறுக்கப்படுவது பரவலாக உள்ளதுஅடுத்துசிறுகுறுநடுத்தரத் தொழில்கள் நலிவடைவதும்
மூடப்படுவதும் நடந்தவண்ணமுள்ளனஉரிய இழப்பீடுகூடஇல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொழில்களில் 
.எல்லாத் தொழில்களிலுமேஇயந்திரங்கள் நவீனப்படுத்தல் காரணமாக வேலையிழப்பு நடக்கிறதுசுயதொழில் 
செய்வோர் மற்றும் முறை சாராப் பிரிவினரும் கூடகடுமையான வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதே 
போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களும்,பல்வேறு கொடுமைக்கு 
ஆளாக்கப்படும் பெண் தொழிலாளர்கள்குழந்தை உழைப்பாளர்களின் பிரச்சனைகளும்தொழிற்சங்க இயக்கத்தின்
 முன் உள்ளசவால்களாக தொடர்கின்றன.வேலையிழப்புகளும்புதிய வேலைவாய்ப்பின்மையும் போக்கப்படவேண்டு மானால்பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவைகாண்ட்ராக்ட்முறை ஒழிக்கப்பட்டுகுறைந்தபட்ச ஊதியம் 
ரூ.15 ஆயிரம் என்ற நிலை உருவாக்கப்பட்டாலே இந்தியபொருளாதாரத்தில் மலர்ச்சி ஏற்படும்முதலாளிகள் 
லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் இதை சொல்லத்தயங்காத அரசுவேண்டும்முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலைஅலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.
உரிமைகளை பாதுகாப்போம்
முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள்வெடிக்கின்றன.இந்தசூழ்நிலையை உணர்ந்து,தொழிலாளிவர்க்க ஒற்று மையையும்தொழிற்சங்க ஒற்றுமையையும் மேலும் 
வலுப்படுத்தும் நோக்கோடு தான் உலக தொழிற்சங்க சம்மேளனத்தோடு இணைந்து உலகதொழிலாளரே ஒன்று
சேருங்கள் என்ற கோஷத்தைஇந்திய உழைப்பாளி மக்களுக்கு முன்னால் CITUமுன்வைத்துள்ளது.இந்திய 
தொழிலாளி வர்க்கத்தின் முன்உள்ள இந்த முக்கிய கடமைகள்.... 
1.நாடுதழுவியஒன்றுபட்டதொழிற்சங்கபோராட்டத்தைதீவிரப்படுத்துவது, 2.தேசியஅளவிலும்,களத்திலும்தொழிற்சங்கங்களின்ஒற்றுமையைஉறுதிப்படுத்திவிரிவுபடுத்துவது, 3. ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்குஎதிராக உள்நாட்டில் போராடுவது மட்டுமின்றி உலகம் தழுவிய தொழிலாளி
வர்க்கப்போராட்டங்களுக்குஒருமைப்பாட்டைதெரிவிப்பது, 4. வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்திக் கொள்கை உருவாக்கத்தில்தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்துவது 
எனமுடிவுசெய்யப்பட்டது.1.குறைந்தபட்சஊதியம்ரூ.15,000,2.காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு சமவேலைக்கு சம ஊதியம்3.அங்கன்வாடி-டாஸ்மாக்-உள்ளாட்சி  துறைகளில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கு  தொகுப்பூதியத்தை  மாற்றி காலமுறைஊதியம்மற்றும்குறைந்தபட்சபென்சன்ரூ.4000,4. காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்துபுதிய வேலைவாய்ப்புகளைஉருவாக்குவது, 5.முறைசாராநலவாரியங்களைமுறையாகசெயல்படுத்துவது,பணப்பலன்களைஇரட்டிப்பாக்குவது, 6.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்வது, 7. தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றுவது போன்ற தமிழக உழைப்பாளி மக்களின்கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்..