நாட்டில் நாள்தோறும் நடைபெறுகின்ற விபத்துக்களிலிருந்து மனிதர்களை காப்பாற்ற அதிக அளவில் பொதுமக்கள் ரத்ததானம் செய்ய முன்வரவேண்டும். தேவையான அளவுக்கு ரத்தம் கிடைக்காமல், பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப்போடும் சூழ்நிலை உள்ளது. பலர் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.நமது நாட்டிற்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அளவு ரத்தம் 4 கோடி யூனிட். ஆனால் ரத்ததானம் மூலம் கிடைப்பதோ 40 லட்சம் யூனிட் மட்டுமே. அதிகளவு பற்றாக்குறை உள்ளது.ரத்ததானத்திற்கு முன், மருத்துவர்கள், ரத்ததான தொண்டு புரிய வருபவர்களின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் 12.5க்கு மேல், இரத்த அழுத்தம் மேல் அளவு 100-140 எம்.எம்./கீழ் அளவு 60-90 எம்.எம். போன்றவற்றை சோதனை செய்த பிறகே இரத்தத்தை பெற்றுக்கொள்வார்கள். ஆகவே, எவ்வித பயமின்றி 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் புரியலாம். 18 வயது முதல் 60 வயது வரையுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம். இதனால், உடல்நல குறைவு ஏற்படாது.ஒருவர் புரியும் ரத்ததானம் 3 பேரின் உயிரை காக்கும் வல்லமை படைத்தது.
No comments:
Post a Comment