ஓங்கட்டும் உங்கள் கீர்த்தி காவலர்களேஉங்களிடம் தடிகள் இருக்கிறது சுழற்றுங்கள்...மிடுக்கான உங்கள் உடைகளுடன் நீங்கள்யாரை கொலைவெறியுடன் தாக்கினீர் அறிவீரா?
யாருக்கெல்லாம் ஆபத்தில் இரத்தம் தேவையோஅவர்களுக்கு இரத்தம் கொடுத்தவனை...நோயாளிகள் நலன் காக்க தேசமெங்கும்மருத்துவமனைகளை தூய்மை செய்தவனை...
எரியாத தெருவிளக்கினை எரிய வைக்ககளத்தில் நின்று கரம் உயர்த்தியவனை...எளிய மக்களின் குரலை எங்கும்விசையாய் எடுத்துச் சென்ற தூயவனை...
சாதிய மோதலில் இளமை அழியாமல்சாதிக்க வா என்று ஆற்றுபடுத்துபவனை...வேலை, கல்வி எங்கள் உரிமையெனதமிழகத்தின் எதிர்காலம் காக்கத் துடிப்பவனை..
பரவட்டும் உங்கள் புகழ் காவலர்களேஉங்களிடம் அதிகாரம் இருக்கிறது ஆடுங்கள்...எடுப்பான உங்கள் சீருடையுடன் நீங்கள்இரத்தம் சிந்த அடித்தவர்யாரென உணர்வீரா?
அங்கு வந்த எந்த இளைஞனும்தனக்கான சொந்த லாபம் பார்த்தவனில்லை...கூலிக்கு கைகளில் கொடி ஏந்தியவனில்லைதலைவனுக்கு வாழ்க கோஷம் இட்டவனில்லை.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் இல்லைதேசம் காக்க தன்வாழ்க்கை ஈந்தவன்...குடிப்பவர்களின் வாகனத்தை வழி மறித்துஅதிகாரமாய் பிச்சை கேட்பவனில்லை...
டாஸ்மாக் கடைகளில் வாழ்விழக்கும் மனிதனைபோதையின் பாதையில் வழி மாறுபவனை...அப்பாதை போகாதே என எச்சரித்துநல்வழிப் படுத்தும் இளைய நாயகனை...
வேலை கேட்டு வீதியில் நின்றவர்களைமுத்துநகர் வீதியில் நைய புடைத்தீர்கள்...உங்கள் தாக்குதலில் கீழே விழுந்தவன்ஆட்காட்டி விரலால் எச்சரிக்கிறான் பாருங்கள்.
அடிக்க மட்டுமே அறிந்தவரே!அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்தேவேலை கேட்டார்கள் அறிவீரா நீங்கள்... பாவம் நீங்கள் வெறும் கூலியாட்கள்...
உங்களை ஏவியவர்க்கு உரத்துச் சொல்கிறோம்உங்கள் தடியடியும் சிறைக் கதவும்எங்களின் நோக்கத்தை சிதைத்துவிடாதுஏனெனில் நாங்கள் பகத்சிங் தோழர்கள்!-
1 comment:
அன்பினால் அகிலத்தை ஆள்பவனை!!
அற்பர்கள் அடக்கத்தான் நினைப்பார்கள்.
அன்பிற்கும் விலை பேசும் அடிவருடிக் கூளிகளின் உயிர் ஆடி அடங்கிய பின்பு அவர்களுக்காக அகிலத்தில் அழும் முதல் தோழர்கள் அவர்கள் தானே...
கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வந்ததாக கூறும் அகிம்சைவாதிகள்
மக்களை அடக்க மட்டும் தடியடி பிரயோகிப்பதும்,இரத்தம் குடிப்பதும் அகிம்சை என்று நினைத்துவிட்ட மூடர்கள்தானோ?!
Post a Comment