இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் CPI மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லம்’ திங்களன்று (ஜூலை7) திறக்கப்படுகிறது.இது குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர் களிடம்கூறியதுவருமாறு:
தி.நகர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக மான ‘பாலன் இல்லம்’ அமைந்துள்ளது. 8 தளங்க ளுடன் (தரை தளம் உள்ளிட்டு) 52 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை கொண்டதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத் திறப்பு விழா திங்களன்று (ஜூலை 7) நடைபெறுகிறது. கட்சி யின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு கொடியேற்றி வைக் கிறார். கட்டிடத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி திறந்து வைக்கிறார்.தேசிய செயலாளர் து.ராஜா, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர்கள் டாக்டர் கே.நாராயணா (ஆந்திரா), பி.வி. லோகேஷ் (கர்நாடகம்), ஆர்.விஸ்வநாதன் (புதுசசேரி), மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் திவாகரன் (கேரளா) மற்றும் நடனக் கலைஞர் மம்தா உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பாஜக தலைவர்கள் உள்ளிட்டு அனைத்து கட்சித்தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment