முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கு வழங்கப்பட்ட அலைக்கற்றை லைசென்ஸை ரத்து செய்யுமாறு தலைமை தணிக்கைத் துறை (சிஏஜி) வரைவு அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.அலைக்கற்றை ஏலத்தை முறைகேடாக இந்நிறுவனம் பெற்றுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கான லைசென்ஸை இன்ஃபோடெல் பிராட்பேண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ஐபிஎஸ்பிஎல்) நிறுவனம் பெற்றது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிக தொகைக்கு இந்நிறுவனம் டெண்டர் கோரி பெற்றது.
லைசென்ஸ் பெற்ற பிறகு இந் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி அதன் பெயரை ரிலையன்ஸ் ஜியோ என மாற்றியதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. ஐபிஎஸ்பிஎல் நிறுவனம் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 252.50 கோடி. ஆனால் அது ரூ. 12,847.77 கோடி தொகைக்கான லைசென்ஸை பெற்றுள்ளது. இது அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிகம் என்று சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment