Tuesday, 1 July 2014

இன்ஜீனியரிங் சீட் கிடைக்கப்பெற்ற முதல் திருநங்கை . . .

தமிழகத்திலேயே முதல்முறையாக இன்ஜீனியரிங் சீட் கிடைக்கப் பெற்ற திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆகியிருக்கிறார் மாணவர் கிரேஸ் பானு.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்ற இவர், ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும்போது பெற்றோர்களால் கைவிடப் பட்டவர்.கடந்த சனிக்கிழமை அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் சீட் பெறுவதற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. கணினி பொறியியலில் டிப்ளமா முடித்திருக்கும் பானுவுக்கு, அரக்கோணத்திலுள்ள சுயநிதி கல்லூரியான ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் (EEE) படிக்க சீட் கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து பானு கூறுகையில், “இந்த நாட்டிலேயே முதல்முறையாக ஒரு திருநங்கைக்கான பொறியியல் சீட் எனக்கு கிடைத்திருக்கவேண்டும். ஆனால், என்னால் சுயநிதி கல்லூரியில் மட்டுமே சீட் பெற முடிந்தது.”, என்று தெரிவித்தார்.பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது டிப்ளமா படிப்பில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார். பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வாய்ப்பு பெற்ற ஒரே திருநங்கையான இவருக்கு அரசு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

No comments: