கோல்கட்டா: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சட்டர்ஜிக்கு, 84, நேற்று காலை, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் கூறுகையில், 'சோம்நாத் சட்டர்ஜியின் மூளைப் பகுதியில், சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
---தோழர்.சோம்நாத் சட்டர்ஜி நலம்பெற BSNLEU மதுரை மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment